Breaking News :

Tuesday, April 15
.

குங்குமத்தின் வைட்டமின் ’டி’ உடலுக்கு?


குங்குமம் மங்கலப் பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்றியில் அணியும் போது, தீய சக்திகள் விலகும். அதிலும் இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது. மேலும் மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு குங்குமம் தயார் செய்யப்படுகிறது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது.

இதோடு தாழம்பூ சேர்த்து தயாரிக்கும் குங்குமம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் சிறப்பு. மேலும் குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும் போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் ’டி’ சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்தி தருகிறது.அதேபோல் மன அமைதி, மங்களகரமான தோற்றம், உடல் நலத்தையும் தருவதால் பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் அணிகிறார்கள்.

🍁குங்குமத்தை வலது கை மோதிர விரலால் தான் நெற்றியில் இட வேண்டும். மற்ற விரல்களைப் பயன் படுத்தக்கூடாது. கோயில்களிலோ, வீட்டிலோ குங்குமத்தை எடுத்து இடது கையில் போட்டுக் கொண்டு, வலது கைவிரலால் தொட்டு வைப்பதும் கூடாது. வலது உள்ளங்கையில் சிறிதளவே போடச் சொல்லி, வலதுகை மோதிர விரலை வளைத்து குங்குமத்தை தொட்டு நெற்றியில் இட வேண்டும்.

🍁குங்குமம் வைக்கும் முறைகள்:
நெற்றியில் குங்குமத்தை வைக்கும் போது சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம். நெற்றியில் குங்குமம் வைக்கும் முறை பெண்கள் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்.

 🍁குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இடலாகாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது.

 🍁கோவிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு மாற்றலாகாது. வலது உள்ளங்கையில் குங்குமத்தைப் பெற்று அந்நிலையிலேயே வலது மோதிர விரலை வளைத்து, குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இடும் புனிதமான முறையினால் இடுவதால், குங்குமத்தின் பரிபூரண தெய்வீக சக்தியைப் பெற்றிடலாம். நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த சூடு தணிகிறது.

* வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
* பெண்கள் முதலில் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
* அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
* தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
* திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் இடுவது சிறப்பு.
* ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் இடுவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.