Breaking News :

Sunday, May 04
.

குதிரைவாலி அரிசி சாப்பிட்டால்?


நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதில் சிறுதானிய உணவுகள் முக்கிய பங்காற்றுகின்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த குதிரைவாலி அரிசியின் பயன்கள் மற்றும் நன்மைகளை பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

குதிரைவாலி அரிசியை எப்படி சாப்பிட வேண்டும்? இதை வடையாகவோ அல்லது தோசையாகவோ செய்து சாப்பிடலாம். தொட்டுக்கொள்வதற்கு தயிர் அல்லது சட்னி பயன்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 குதிரைவாலி அரிசியை எப்போதும் ஈரமில்லாத குளிர்ச்சியான இடத்தில் காற்றுப்புகாத பாத்திரத்தில் அடைத்து வையுங்கள்.

உணவாகவும், தீவனமாகவும் பயன்படும் சிறுதானியங்களில் விசேஷமான வகையைச் சேர்ந்தது குதிரைவாலி. இது ஊட்டச்சத்து அதிகமுள்ள க்ளூட்டன் இல்லா உணவாகும். இதன் மருத்துவ குணங்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்காக சமீப காலமாக இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட குதிரைவாலி அரிசியை பல நூற்றாண்டுகளாக நம் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். உங்கள் டயட்டில் குதிரைவாலி அரிசியை சேர்ப்பதால் கிடைக்கும் 6 பயன்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஊட்டச்சத்து நிறைந்தது: மிகவும் சிறிய தானிய வகையைச் சேர்ந்த குதிரைவாலி அரிசியில் பல முக்கியமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளது. வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட் என பலவும் குதிரைவாலி அரிசியில் உள்ளது. இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி அடங்கிய குதிரைவாலி அரிசியை அவசியம் நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குதிரைவாலி அரிசியில் க்ளூட்டன் இல்லாதது மிகப்பெரிய பலனைக் கொடுக்கும். ஆகையால் கோதுமை, பார்லி போன்ற செலியாக் நோய்களை உருவாக்கும் தானியங்களுக்குப் பதிலாக குதிரைவாலி அரிசியை பயன்படுத்தலாம்.


குதிரைவாலி அரிசியில் குறைவான க்ளைசைமிக் இருப்பதால், இதை சாப்பிட்டதும் உடனே சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதனால் டயாபடீஸ் நோயாளிகளுக்கு இது மிகச்சிறந்த உணவாகும்.

சீரான இடைவெளியில் மலம் கழிப்பதை ஊக்கப்படுத்தி மலச்சிக்கலை போக்க உதவுகிறது குதிரைவாலி அரிசி. அதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள நார்ச்சத்து. இது நம் குடலை ஆரோக்கியமாக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள் குதிரைவாலி அரிசியை தங்கள் உணவில் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். குதிரைவாலி அரிசியில் அதிகளவு நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருப்பதால், இதை சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது. இதனால் அதிகமான கலோரிகள் உண்பது தடுக்கப்படுகிறது. இது உடல் எடையை பராமரிப்பதற்கு உதவியாக இருக்கிறது.

அடிக்கடி தங்கள் உணவில் குதிரைவாலி அரிசியை சேர்த்துக் கொள்வதன் மூலம் இதயம் ஆரோக்கியம் பெறும். குதிரைவாலி போன்ற சிறுதானியங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் இதய நோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. குதிரைவாலி அரிசியில் உள்ள நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் ரத்த அழுத்த்த்தை கட்டுப்படுத்தி கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.