Breaking News :

Saturday, December 21
.

காதல் வயப்பட்டால் காதலனும் காதலியும்?


இந்த காலத்தில் வேண்டுமென்றால் பெண்கள் தாங்களாக தன் அன்பை, காதலை காதலனிடமோ, கண்வனிடமோ தாமாக முன்வந்து சொன்னால் அதில் மதிப்பு இருக்காது அல்லது பெண்ணை தவறாக இந்த சமூகம் சித்தரிக்கும் என்று ஏறக்குறைய அணைத்து பெண்களும் தங்கள் காதல் சுகந்திரத்தை இழந்து இருக்கிறார்கள்.
 
ஆண் மட்டுமே தன் காதலை சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான் அவ்வாறே பெரும்பாலும் காதல் திருமணங்கள் நடைபெறுகிறது.  ஆண் மட்டுமே பெண் மீது உள்ள விருப்பத்தை தெரியப்படுத்துபவனாக இருக்கிறான்.  ஆனால் சங்க கால பெண்கள் அவ்வாறு வாழ்ந்து இருக்கவில்லை.  அவர்கள் தன் ஆண் மீதான விருப்பத்தை துணிச்சலாக வெளிப்படுத்தி இருக்கிறாள்.
 
அது மட்டும் இல்லாமல் தன் பாலியல் இச்சைகளை தன் ஆணிடம் தயங்காமல் வெளிப்படுத்துவதாகவும் சங்க கால பாடல்கள் கூறுகிறது
தன் காதலன் வாழும் அந்த மழையின் உச்சியில் இருந்து வரும் நீரில் மிதந்து வரும் காந்தன் மலரின் வாசத்தையும், அதை முகர்ந்து பார்ப்பதும் எனக்கு இன்பத்தை கொடுக்கிறது என்று தன் காதலை சங்ககால பெண் வெளிப்படுத்துகிறாள்.
 
அதாவது அவளுடைய தலைவன் இருக்கும் இடத்தில் இருந்து எந்த பொருள் வந்தாலும் அது அவளுக்கு இன்பத்தை கொடுக்கிறது என்கிறாள்
நான் அவனிடம் காதல் வயப்பட்டு உள்ளதால், அந்த காதலனும் காதலியும் தங்களுக்குள் உடலுறவு கொள்ளவது இயல்பானது என்று சங்க இலக்கியம் கூறுகிறது.
 
அதாவது காதல் கொண்ட ஆணும் பெண்ணும் சில சில காதல் சில்மிஷங்கலில் ஈடுபடுவதை தவறாக சித்திரக்காமல் அது இயற்கையானது என்று அங்கீகாரம் கொடுக்கிறது. காம என்பது பெரும்பாலும் காதலர்களுக்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது. திருமணமானவர்களை ஒப்பிட்டு காமத்தை சுட்டிக்காட்டவில்லை ஆனால் காதலர்கள் என்றவுடன் காமம் தான் அனைவரின் மனதில் தோன்றும் விஷயமாக உள்ளது அதனால் காதலும் காமமும் இணைந்தே பயணிக்கும் எப்போதும்.
 
பெண்களை பொறுத்த வரை தன் தேகத்தில் வளர்ந்து பொங்கும் இளமையானது தன் காதலனுக்கு பயன்படவில்லை என்று மிகவும் அந்த பெண் வாடிப்போவதாக சங்க இலக்கிய பாடல் கூறுகிறது. வேலைக்காக தன்னை விட்டு பிரிந்த தலைவனை எண்ணி என் உடலில் இவ்வளவு அழகும் என் தலைவனுக்கு பயன்படாமல் வீணாக போகிறதே என்று எண்ணி மிகவும் துயரம் அடைகிறாள் இவ்வாறு பெண்கள் காமவயப்பட்டு வருந்தும் பாடல்கள் ஏராளமாக உள்ளன.
 
நான் காமவயப்பட்டு இருக்கும் போது என் உடலை தீண்டி செல்லும் தென்றல் காற்றுகூட எனக்கு என் காதலன் தீண்டும் உணர்வை உருவாக்கிறது,  இந்த தென்றல் காற்று கூட என் காம உணர்வை அலைக்கழிக்கும் அளவு கூட என் காம உணர்வில் வீழ்ந்து விடுகிறனே என்று ஒரு பெண் புலம்புகிறாள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.