Breaking News :

Sunday, December 22
.

ஆண்மை குறைவை போக்க ஆதி முத்திரை யோகாசனம்


முத்திரையை பார்த்தவுடன் உங்களுக்கு என்ன நினைவு வருகின்றது? இந்த முத்திரையை நீங்கள் ஒவ்வொரு வரும் செய்து உள்ளீர்கள். பிறந்த குழந்தையை பாருங்கள். தனது இருகை விரல்களையும் மடக்கி கட்டைவிரலை உள்ளே வைத்து இந்த ஆதி முத்திரையில் தூங்குகின்றது.

அதனால் தான் குழந்தையின் உடலில் உயிரோட்டம் சிறப்பாக இயங்குகின்றது. எனவே தான் இதற்கு ஆதி முத்திரை என்ற பெயர் வந்தது. குழந்தை வளர வளர நித்திரை அதிகமாகி ஆதி முத்திரையை மறந்துவிட்டது.

நாம் சிறு குழந்தையின் கைவிரல்களை ஒவ்வொன்றாக எடுத்து விட்டாலும் மீண்டும் தனது விரல்களை மடக்கி ஆதி முத்திரைக்கு தானாக சென்று விடும்.

ஆதி முத்திரை செய்முறை:

விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும்.

 பத்மாசனம் அல்லது வஜ்ராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.

உங்களது முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.

கண்களை மூடி இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து, மிக மெதுவாக வெளி விடவும்.

ஒரு நிமிடம் இவ்வாறு செய்யவும்.

 இப்போது நமது கட்டை விரலை உள்ளங்கை நோக்கி மடித்து, மற்ற நான்கு விரல்களையும் கட்டை விரலுக்கு மேல் மூடி வைத்து ஒரு அழுத்தம் கொடுக்கவும்.

இந்நிலையில் இருகைகளிலும் செய்யவும். பத்து நிமிடங்கள் செய்யவும்.

ஆதி முத்திரையின் பலன்கள்:

 உடலில் உயிரோட்டம் சீராக நடைபெறும்.

உயிர் சக்தி பாதுகாக்கப் படுகின்றது.

உடல் புத்துணர்ச்சியுடன் இயங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

மன ஒருமைப்பாடு கிடைக்கும்.

 சுறுசுறுப்பாக உற்சாகமாக திகழலாம்.

 நல்ல எண்ணங்கள் உதயமாகும். தீய எண்ணங்கள் விலகும்.

 எப்போது உடல் சோர்வடைகின்றதோ அப்போது இந்த முத்திரையை செயதால், உடன் ரத்த ஓட்டம் நன்கு இயங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.

படிக்கின்ற மாணவர்கள் படிக்கும் பொழுது உடல் சோர்வு ஏற்பட்டால் ஐந்து நிமிடம் இந்த முத்திரையை செய்தால் மீண்டும் சோர்வு நீங்கும். உற்சாகமாக படிக்கலாம்.

உடலில் விந்து சக்தியை தவறாக அதிகம் விரயம் செய்தவர்கள், அதனால் ஆண்மை குறைவு, வீர்ய தன்மை இழந்தவர்கள் மேற்குறிப்பிட்ட ஆதி முத்திரை செய்து வந்தால் நிச்சயம் பலன் உண்டு.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.