Breaking News :

Wednesday, February 05
.

மலச்சிக்கலுக்கு இத செய்தால் உடனே?


மலச்சிக்கல் மனிதருக்கு பல சிக்கலை" ஏற்படுத்தும் என பழமொழியாக சொல்வார்கள். தற்போதைய நவீன காலத்து தவறான உணவு முறை பழக்கவழக்கத்தால் மலச்சிக்கல் பிரச்சனையால் சிறு குழந்தைகள் முதல் நடுத்தர வயதினர் வரை பலரும் பாதித்து வருகின்றனர். மலச்சிக்கலை சரி செய்யும் இயற்கையான வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் ஒரு பொதுவான ஆனால் பெரும்பாலும் கவனிக்கப்படாத உடல்நலப் பிரச்சினை, குறிப்பாக குழந்தைகள் மற்றும் நடுத்தர வயதினர். வாரத்திற்கு மூன்றுக்கும் குறைவான அளவில் மலம் கழிப்பதாக வரையறுக்கப்பட்ட மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கிறது. காரணங்கள், எச்சரிக்கை அறிகுறிகள் மற்றும் மேலாண்மை உத்திகளைப் புரிந்துகொள்வது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும்.

அசைவம் சாப்பிட்டால் அசைவம் ஜீரணமாக 48 மணி நேரம் ஆகும் என கூறப்படுகிறது.இந்த நிலையில் அசைவம் சாப்பிட்ட மறுநாள் பலருக்கு மலம் கழிக்க முடியாமல் தொந்தரவு ஏற்படுகிறது. உடலில் உள்ள பாக்டீரியாக்களை பொறுத்து ஜீரண சக்தி மாறுபடுகிறது. அசைவம் சாப்பிடும்போது பாக்டீரியாக்கள் அதை செரிக்க நேரம் எடுத்துக் கொள்கின்றன.சைவம் சாப்பிடும்போது பாக்டீரியாக்கள் அதனை விரிவாக செரிக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அசைவம் சாப்பிடும் போது அதனை செரிமானம் செய்ய பாக்டீரியாக்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. சைவ உணவை சேர்க்கும் பாக்டீரியாக்களுக்கும் அசைவ உணவை செரிமானம் செய்யும் பாக்டீரியாக்களுக்கும் வித்தியாசம் உண்டு. ஒரு சிலருக்கு சிக்கன் சாப்பிட்டால் மலம் இறுகும். ஒரு சிலருக்கு சிக்கன் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் இது அவரவர் உடலில் உள்ள பாக்டீரியாக்களை பொருத்து மாறுபடும்.

மலம் கழிக்கத் தோன்றும் ஆனால் வராது என்பவர்கள் வயிற்றில் உள்ள பாக்டீரியா மலத்தை கட்டிப்படுத்தும் தன்மை கொண்டவை. இந்த மாதிரியான மலச்சிக்கல்கள் உள்ளவர்கள் சிக்கன் போன்ற அசைவ உணவை எடுத்துக் கொள்ளும் போது இரவில் தயிர் மற்றும் எளிதில் செரிமானம் ஆகும்.

 உணவுகளை எடுத்துக் கொள்வதால் இந்த பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இரைப்பை உணவை செரிப்பதற்கு எடுப்பது மூன்று மணி நேரம். இரவில் சாலட் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள், அசைவம் சாப்பிடுவதால் ஏற்படும் மலச்சிக்கலில் இருந்து உடனடியாக குணப்படுத்தும்.


நெய் தினமும் காலை 3ஸ்பூன் நெய்யை சூடாக்கி அதனை வெறும் வயிற்றில் குடித்து விட்டு உடனடியாக வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.

நெய் மற்றும் மாவுச்சத்து உள்ள பொருளையும் அல்லது நெய் மற்றும் சர்க்கரை உள்ள பொருளை சேர்த்து எடுத்துக் கொண்டால் அது உடலில் கெட்ட கொழுப்பாக போய் சேரும். நெய்யை காலையில் சூடாக்கி வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளுங்கள் அதுவே சிறந்தது. நெய்யில் உள்ள வழுவழுப்பு தன்மை உணவை எளிதில் செரிக்க உதவுகிறது.

நீயை முறையாக சாப்பிடும் ஒருவருக்கு குடல் எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் ஏனென்றால் நெய்யில் எதுவும் ஒட்டாது.

தினமும் காலை வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டையை எடுத்துக் கொள்ளுங்கள். இது உணவுக் குழாயை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இது உணவு குழாயில் உள்ள கெட்ட நுண்ணுயிர்களை அழிக்க உதவுகிறது. வேப்பிலை மஞ்சள் இதை இரண்டையும் சேர்த்து தினமும் காலை எடுத்துக் கொள்வதன் மூலம் பெரும்பாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய நுண்ணுயிர்களை அனைத்தையும் அழிக்கும் தன்மை கொண்டது. சுத்தமான குடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.


தினமும் காலை திரிபலாவை கொஞ்சம் தண்ணீர் அல்லது ஒரு ஸ்பூன் பால் மற்றும் தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இது இயற்கையாக பெருங்குடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்த உதவுகிறது மேலும் வயிற்றின் தொப்பையை குறைக்கவும் இது உதவியாக இருக்கும்.


தினமும் இரவு பாதி ஸ்பூன் விளக்கெண்ணையை சூடு செய்து தண்ணீர் அல்லது பாலில் கலந்து குடியுங்கள். இவ்வாறு செய்வதால் பெருங்குடல் சுத்தமாக இருக்கும்.'


நெல்லிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். ஆனால் அதன் தயாரிப்பு இரவில் செய்யப்பட வேண்டும். ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது நெல்லிக்காயை சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரை காலையில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிக்கவும். நெல்லிக்காய் நீர் வயிற்றை சுத்தப்படுத்துகிறது மற்றும் குடலில் இருந்து திரட்டப்பட்ட மலத்தை எளிதாக நீக்குகிறது.


பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்க்க வேண்டும். அதிகப்படியாக பால் சார்ந்த உணவுகளை எடுத்துக் கொள்வது பெருங்குடலில் ஒட்டிக் கொள்ளும். இதனால் ஏற்படும் கழிவு பொருட்கள் உடலில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வெளியில் வராது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.