தேவையானப் பொருட்கள்:
நல்லெண்ணெய் - 150மில்லி
வெங்காயம் - 1/2 கிலோ நறுக்கியது
பிஞ்சு பொடிக் கத்திரிக்காய் - 1/2 கிலோ முழுதாக இருக்குமாறு நான்கு பாகங்களாக நறுக்கியது.
தக்காளி - 5 நறுக்கியது
இவை அரைக்கத் தேவையானப் பொருட்கள் :
மிளகாய் வற்றல் - 10 பெரியது
சீரகம் - 3 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 முடி நறுக்கியது
இவை குழம்பில் போட வேண்டிய பொருட்கள்:
வீட்டில் நன்கு வறுத்துச் செய்த வெந்தயக் பொடி - 3 டீ ஸ்பூன்
மஞ்சள்தூள் - இரண்டு சிட்டிகை
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் முதலில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு இட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
2. வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கியத் தக்காளி இட்டு நன்கு சூஸ் ஆகும் வரை வதக்கவும்.
3. வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் நான்கு பாகங்களாக நறுக்கிய ஆனால் முழுசாக இருக்கும் பிஞ்சுக் கத்தரிக்காய்களை அதில் இட்டு நன்கு வதங்க விடவும்.
4. கத்தரிக்காய்களை வதக்கும் நேரத்தில் அரைக்க வேண்டியப் பொருட்களை தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
( பேஸ்ட் பதத்தில்)
5. இப்போது கத்தரிக்காய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
6. இப்போது வெந்தயத்தூள் மற்றும் மஞ்சள் தூள் இட்டு மூன்று முதல் நான்கு கொதி வரும் வரை குழம்பை கொதிக்க விடவும்.
7. குழம்பு ரெடி ஆனதும் அதில் கருவேப்பிலை மல்லி இட்டு இறக்கிச் சுடச்சுட சாதத்தில் போட்டு பெசஞ்சு சாதம் ஒரு வாய் அப்பளம் ஒரு கடினு கடித்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா பிரண்ட்ஸ். வேறென்ன வேண்டும்.
உலகத்திலே இந்த முட்டக் கத்தரிக்காய் குழம்பு சாப்பிடும் இன்பம் போதும் நெஞ்சினிலேனு உங்களுக்கு பாட்டுப் பாடத் தோன்றும்.
குழம்பு நன்கு சிவப்பு கலராக வர வேண்டும் என்றால் வீட்டில் செய்த காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்க்கலாம்.
காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்தால் அரைக்கும் போது மிளகாய் வற்றல் சேர்க்கத் தேவையில்லை. இல்லை என்றால் இரண்டும் பாதி பாதியாக சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு இன்னும் குழம்பில் பிளேவர் வேண்டும் என்றால் கறி மசால் தூவிக் கலந்து கொள்ளலாம்..