Breaking News :

Sunday, February 23
.

இரவில் தூக்கம் வரவில்லையா இத செய்தால்?


என்ன பொருத்த வரைக்கும் ரொம்ப முக்கியமான காரணம் என்று நான் இதுதான் நினைக்கிறேன்.

அதிகமா சிந்திக்கிறது. அதுக்காக இரவில் ரொம்ப சிந்திக்காமல் இருப்பது எப்படின்னு யோசிக்க ஆரம்பிக்க கூடாது.

ஒருவனிடம் போய் நீ எதை பத்தி வேணாலும் யோசி ஆனா பாம்பு பத்தி மட்டும் யோசிக்காதே அப்படின்னு சொன்னா அவன் நினைவு பூரா பாம்பு கிட்ட தான் போகும்.

அதனால் நீங்களும் எப்படி யோசிக்காம இருக்குறதுனு ரொம்ப ஆழமாக யோசிக்க ஆரம்பிக்கக் கூடாது.
மனம் ஒரு குரங்கு. இது யார் சொன்னாங்கனு தெரியாது ஆனா அதுதான் உண்மை.

ஒரு குட்டி கதை சொல்றேன்.

ஒரு ஊர்ல ரவி ரவியினு ஒரே ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு நாய் வளர்த்தான். அந்த நாய் பேர் பப்பி. அதுனா அவனுக்கு உயிர்.

ஒருநாள் அந்த பப்பிக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு. இவன் எங்கேயோ ஓடிப்போய் ஒரு மருந்து கடையில் மருந்து வாங்கிட்டு வந்தான்.

இவன் அந்த மருந்தை அந்த பப்பிக்கு எப்படி கொடுப்பது என்று யோசித்துக்கொண்டிருந்த பொழுது அவனுடைய நண்பன் ஒருவன் வீட்டுக்கு வந்தான்.

உடனே அவனுக்கு ஒரு யோசனை வந்துச்சு. அவன் தன்னுடைய நண்பனிடம் நீ பப்பியின் பின்கால் ரெண்டையும் புடிச்சிக்க. நான் முன் கால் இரண்டையும் பிடித்துக்கொண்டு வாயில ஊத்தி விடுகிறேன். அப்படின்னு சொன்னான்.

சொன்ன மாதிரியே செஞ்சு பாக்குறாங்க இருந்தாலும் பப்பி ஓட வாயில ஊத்த முடியல. அது துள்ளுது அங்கேயும் இங்கேயும் குதிக்குது, ஓடுது.

கடைசில அவுங்க ரெண்டு பேருக்கும் சண்டையே வந்துடுது. நடுவுல சண்டையில அந்த மருந்து பாட்டிலும் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

 திடீர்னு பார்த்தால் ஆச்சரியம் அந்த நாயே மன்னிக்கவும் அந்தப் பப்பிய கீழே கிடந்த அந்த மருந்தை நக்குது. அவ்வளவுதாங்க கதை.

தேவையில்லாம எதுக்கு இப்ப இந்த கதையை நான் சொன்னேனு உங்களுக்கு சந்தேகம் வரலாம். எதுக்கு சொன்னேனா அந்தப் பப்பி மாதிரி தாங்க நம்ம மனசும்.

மனதை நீங்கள் கட்டுப்படுத்த நினைத்தால் அது அலையும்.
அது போறபோக்குல நீங்க விட்டுட்டா அது அமைதி ஆயிடும்.
அதுக்காக சிந்திக்கிறது தப்பு என்று நான் சொல்லல.

வருங்கால உலகமே இளைஞர்களின் கற்பனையில் தான் இருக்கு. ஆனா தேவையில்லாத சிந்தனைகளை உங்களுக்கு தவிர்க்க தெரியவேண்டும்.

சரி இப்ப இதுக்கு என்ன தீர்வு என்று பார்ப்போம்.

இரவில் நீங்கள் தூங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஏதோ ஒரு சிந்தனை உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது. அது எப்படிங்க நீங்கதான் தூங்கணும் யோசிக்கிறீங்க அப்போ எப்படி உங்களுக்கு ஒரு சிந்தனை வந்து உன் தூக்கத்தை கெடுக்கும்.

விசுவாசம் படம் கிளைமாக்ஸ் பாத்துட்டு நம்ம கண்ணுல தண்ணி வந்துடுச்சு. ஏன் அது நடிப்பு என்று நமக்கு தெரியாதா ஏன் நம்ம கண்ணுல கண்ணீர் வந்துச்சு.

அது படம் தான் நடிப்பு என்று சொல்வது நம் மூளை. அதையும் மீறி மனதளவில் அந்தப் படம் நம்மை பாதிக்கும் போது நம் கண்ணில் கண்ணீர் வழிகிறது.

இரவில் உங்களை தூங்கவிடாமல் சிந்திக்க வைப்பது உங்கள் மனம். இரவு நேரம் ஆகிவிட்டது இன்னும் தூக்கம் வரவில்லையே என்று யோசிப்பது உங்கள் மூளை. இந்த நேரத்துல நாம என்ன பண்ணனும்னா. உங்கள் மூளையை உங்கள் மனதிடம் இருந்து சற்று விலக்கி வைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் தான் நாம் அதோடு சண்டை போட்டுக்கொண்டு இருப்போம். ஐயையோ மணி 1 ஆயிடுச்சே இன்னும் தூக்கம் வரலையே. ஏன் இதெல்லாம் இப்ப யோசிச்சு கிட்டு இருக்கோம். காலையில யோசிக்கலாமே.

இப்படி மூளையை மனதோடு சண்டையிட கூடாது. இரவில் தூக்கம் வரவில்லை என்றால். அப்படியே மேலே உங்கள சுத்தி என்னவெல்லாம் இருக்குன்னு பாருங்க. உங்கள் சிந்தனையை மாற்றுங்கள்.

எப்பொழுதும் படுப்பது போல் படுக்காமல் தலைகீழாக படுத்து பாருங்கள். (தலைகீழாக என்றால் குப்புற படுக்க சொல்லவில்லை எப்போதும் வடக்கு பக்கம் பார்த்து தலை வைத்த படுத்தால். இப்போது தெற்கு பக்கம் தலையை வைத்து படுங்கள்)

இந்த மாதிரி செய்யும்போது உங்கள் சிந்தனை எளிதாக மாறும் சீக்கிரம் தூக்கம் வரும். இரவு உங்களை பிடித்த உணவு பிடித்த பாடல் பிடித்த திரைப்படம் இதெல்லாம் செய்யும் போது கண்டிப்பா சீக்கிரம் தூக்கம் வந்துடும்.

இரவு நேரத்தில் ஒரு நகைச்சுவை திரைப்படத்தை பார்க்கலாம், ரொம்ப சென்டிமென்ட் உள்ள படம், புரட்சிகரமான படம் இதெல்லாம் பார்ப்பது குறைத்துக்கொள்ளுங்கள். இறுதியாக உங்களை நீங்களே புரிஞ்சுக்கோங்க. உங்கள் மனது எப்படினு உங்களுக்கு மட்டும் தான் தெரியும் இந்த பிரச்சனையை முழுமையாக தீர்ப்பது என்பது உங்களால் மட்டும்தான் முடியும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.