எண்ணெய் உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது தான் ஆரோக்கியமான விஷயம். எண்ணெய் உணவுகள் சாப்பிட்டதும் அவை சாச்சுரேட்டட் கொழுப்பாக மாறி, குடலின் உட்சுவர்களில் ஒட்டிக் கொள்ளும். முறையாக கழிவுகள் வெளியேறாது. ஜீரணக் கோளாறுகள் அதிகமாக உண்டாகும்.
எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் தான் நமக்கு அதிகமாக பிடிக்கிறது. குழந்தைகளும் அதை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிட்ட பிறகு பின்பற்ற வேண்டியவை:
அசைவ உணவு சாப்பிட்ட பிறகும் பிறகு கொழுபு்பு உணவுகள் (எண்ணெய் பொருள்கள்) சாப்பிட்ட பிறகும் வெதுவெதுப்பான நீர் குடிப்பது அவசியம். வெதுவெதுப்பான நீர் குடிக்கும்போது கொழுப்புகள் படிவது தடுக்கப்படும்.
எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிட்ட பிறகு நட்ஸ் மற்றும் விதைகளைச் சாப்பிடுவது நல்லது. இவற்றில் உள்ள நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் எண்ணெய் உணவுகளை எளிதாக உடைத்து கழிவுகளை வெளியேற்ற உதவி செய்யும்.
ஓமம் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. வீட்டிலேயே ஒரு ஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் ஆறவைத்து குடித்தால் அசைவ உணவுகள் சாப்பிட்ட பிறகு ஏற்படும் வயிற்றுப் பொருமல், புளித்த ஏப்பம், வயிறு உப்பசம், நெஞசெரிச்சல் ஆகியவை குறையும்.
நிறைய நார்ச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுவது இயற்கையாகவே ஜீரண மண்டலத்துக்கு மிக நல்லது. அதிலும் எண்ணெய் உணவுகள் சாப்பிட்டபிறகு நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது சிறந்தது. குறிப்பாக பழங்கள் மற்றும் வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட சாலட் வகைகளை நிறைய சாப்பிடலாம். இது அந்த கொழுப்பு உணவுகளையம் சேர்த்து ஜீரணிக்க உதவும். குறிப்பாக மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்.
சிலருக்கு டீயுடன் சேர்த்து பஜ்ஜி, வடை, போன்ற பொரித்த உணவுகள் சாபபிட பிடிக்கும். எண்ணெயில் பொரித்த மற்றும் வறுத்த உணவுகளுடன் பால் சேர்த்த டீ குடிப்பது அஜீரணத்தையும் வயிற்றுக் கோளாறுகளையும் உண்டாக்கும். அதனால் அசைவ உணவுகள் அல்ல எண்ணெய் உணவுகள் சாப்பிட்ட பிறகு, பால் சேர்த்த டீ, காபிக்கு பதிலாக க்ரீன் டீ அல்லது இஞ்சி டீ ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
அசைவம் சாப்பிட்ட பிறகு, குளிர்ச்சியாக கூல் டிரிங்கஸ் அல்லது ஐஸ் க்ரீம் சாப்பிடுவது மிக மிகத் தவறு. காலை, மாலையில் நடைப்பயிற்சி செல்லும் பழக்கம் இருந்தாலும் கூட, அசைவ உணவுகள் மற்றும் எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளைச் சாப்பிட்ட பிறகு கொஞ்சம் நேரம் நடப்பது நல்லது. இப்படி உணவு உண்டபிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்தால் ஜீரணம் எளிதாகும். அசிடிட்டி போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.