Breaking News :

Thursday, December 26
.

உடலுறவுக்காக மட்டும் பழகுவதை எப்படி அறிவது?


வெறும் கமதிற்காக மட்டும் பெண்களிடம் பழகும் ஆண்களை தெரிந்துகொள்வது சுலபம் தான். ஒரு ஆண் என்ற முறையிலும், மூன்று சகோதரிகளுக்கு தம்பி என்ற முறையிலும், சில தோழிகளுக்கு நண்பன் என்ற முறையிலும் ஓரளவுக்கு எனக்குத் தெரிந்ததை யாருக்கும் உதவலாம் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.

எந்த முகாந்திரமும் இல்லாமல் வழிய வந்து பேசுவது.

எந்த தேவையும் இல்லாமல் ஏதோ ஒரு காரணத்தை உருவாகி பேச முயற்சிப்பது ஆரம்பத்தில் கண்டறிவது கடினம் ஆனால் கண்டறிந்துவிடலாம்.

தன்னை மட்டும் நல்லவன் போலவும் அநியாயத்தைக் கண்டால் பொங்குவது போலவும் சினிமா பாணியில் நடிப்பார்கள்.

பெண்களின் மீது மிகுந்த மரியாதை இருப்பது போலவும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலவும் நடிப்பார்கள்.

பெண்களுக்கு பிடித்த சில விஷயங்களை தனக்கு வராது என்று தெரிந்தும் செய்வது இதையும் சிறிது நேரத்தில் கண்டுபிடித்து விடலாம்.

கொஞ்சம் பழகி உடன் உரிமை எடுத்துக் கொண்டு பேசுவது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.

சிறிது பழகியவுடன் அழகாக இருக்கிறீர்கள் என்று காம்பிளிமெண்ட் கொடுப்பது இதை இப்படி செய்தால் இன்னும் அழகாக இருப்பீர்கள் என்று அழகுக்கான அட்வைஸ் கொடுப்பது.

முக்கியமாக உடையை பற்றி பேசுவது பின்பு அதையே சாதகமாக்கிக் கொண்டு உடை குறித்த கமெண்ட் அடிப்பது கருத்து கூறுவது.

பொதுவான இடத்திற்கு அழைத்து சென்று கொஞ்சம் பழகி உடன் நம்பிக்கை பெற்று தனிமையான இடத்திற்கு அழைப்பது. (எடுத்துக்காட்டு ஓடாத படத்துக்கு மேட்னி ஷோ புக் செய்வது)
இவர்களின் முக்கிய ஆயுதம் காதல் தான் அதை வைத்து நம்பிக்கை கூறிய வார்த்தைகளை பேசி காரியத்தை சாதிப்பது.

ஆண்களைப்பற்றி இப்படி தவறாக சித்தரிப்பதாக யாரும் நினைக்க வேண்டாம் பல ஆண்களுக்கு மத்தியில் சில ஆண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் என்பதை மறுக்க இயலாது. கூடியவரை பெண்கள் நல்லவனாக இருந்தாலும் ஆண்களை ஒரு சந்தேகப் பார்வையில் பார்ப்பதே பெண்களுக்கு பாதுகாப்பானது.

உண்மையான நல்லெண்ணம் கொண்ட எந்த ஒரு ஆணும் இதை தவறாக புரிந்து கொள்ள மாட்டான்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.