வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் கிடைக்கும் ஒரு பானம் தான் பதநீர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.
இது கோடையில் தான் அதிக அளவில் கிடைக்கும். எனவே கடைகளில் விற்கப்படும் கண்ட ஜூஸ்களை குடிப்பதற்கு பதிலாக, இப்பதநீரை வாங்கி குடியுங்கள்.
உடல் உஷ்ணம் :-
கோடையில் விற்கப்படும் பதநீர் குளிர்ச்சியானது. எனவே இப்பதநீரைக் குடிப்பதால், உடல் உஷ்ணம் குறையும்.
சோர்வை நீக்கும் :-
கோடையில் அதிகப்படியான வெயிலால் ஏற்படும் சோர்வானது பதநீர் குடிப்பதால் நீங்கும்.
மலச்சிக்கல் :-
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், பதநீரைக் குடித்தால், அதில் உள்ள நார்ச்சத்துக்களால் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் நீங்கும். மேலும் வயிற்றுப் புண் இருந்தாலும் குணமாகும்.
ஆரோக்கியமான பற்கள் :-
பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டாலும் அதனைத் தடுக்கும்.
பித்தம் குறையும் :-
கோடையில் பதநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலில் உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் விரட்டும்.