Breaking News :

Friday, May 02
.

உறவை தக்க வைக்க செக்ஸ் போதுமா?


எந்த ஒரு ஆணும் காதலில் செக்ஸ் கேட்பது சாதாரணம், ஆனால் ஒரு உறவை தக்க வைத்துக்கொள்ள செக்ஸ் மட்டுமே போதாது.

அதை கொடுத்தால் மட்டுமே உடனிருக்கும் ஆண் உங்களுக்கு நல்ல துணைவனாக முடியாது.

ஒரு காதலில் உடலுறவு பற்றி பெண்கள் இரண்டு வித காரணங்களை புகாராக சொல்கிறார்கள், அதாவது புலம்புகிறார்கள்.

(1) என் உடலை அவருக்குக் கொடுத்த பிறகு அவர் என்னை விட்டுச் சென்றுவிட்டார்.
(2) என் உடலை அவருக்குக் கொடுக்க மறுத்ததால் அவர் என்னை விட்டு சென்றுவிட்டார்.

குறிப்பு: கொடுத்தவர்களும் குறை கூறுகிறார்கள்...
 கொடுக்க மறுத்தவர்களும் குறை கூறுகிறார்கள்...
( என்ன வித்தியாசம்)

பெண்களே புரிந்துகொள்ளுங்கள், செக்ஸ் மட்டும் போதாது, நீங்கள் ஒரு ஆணுக்கு வழங்கக்கூடிய ஒரே விஷயம் செக்ஸ் மட்டும் அல்ல... அது காசு கொடுத்தால் அவனுக்கு எங்கே வேண்டுமானாலும் கிடைக்கும்...

உடலுறவுக்கு வெளியே ஒரு ஆணுக்கு கொடுக்க உங்களிடம் எதுவும் இல்லை என்றால், தயவுசெய்து காதலிக்கதீர்கள்...
உங்களுடன் உடலுறவு கொள்வதால் மட்டுமே ஒரு ஆண் உங்களுடன்  இருப்பதில்லை. இருக்கவும் விரும்புவதில்லை.
உறவு என்பது வாங்குவதும் விற்பதும் அல்ல.

புத்திசாலியான பெண்களை ஆண்கள் விரும்புகிறார்கள்...

உயரிய எண்ணங்கள் கொண்ட பெண்களை ஆண்கள் நேசிக்கிறார்கள்..

ஆண்களுக்கு மரியாதையான பெண்களை விரும்புகின்றனர்...

உழைக்கும் / வேலை செய்யும் பெண்களை ஆண்கள் மதிக்கின்றனர்.

நல்ல மற்றும் பல்பணிகளில் சிறந்து விளங்கும் பெண்ணை ஆண்கள் விரும்பி பாராட்டுகிறார்கள்.

சமையலறை / கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெண்களை ஆண்கள் மதிக்கிறார்கள்.

தங்கள் கண்களை எப்போதும் வெளியில் வைத்திருக்கும் பெண்களை  விட, வீட்டில் கண்களை வைத்திருக்கும் பெண்களை மதிக்கிறார்கள்.

ஆண்கள் உண்மையில் பெண்களை மிகவும் விரும்புகிறார்கள்.

ஆண் என்பவன் பெண்களுக்காகவும், பெண் என்பவள் ஆண்களுக்காகவும்தான் ஆண்டவன் படைத்திர்க்கிறான்,

ஆதலால் பெண் என்றாலே ஆண்களுக்கு இஷ்டம்தான் அது இயற்கை, அவள் கருப்போ, வெள்ளையோ, உயரமோ, குள்ளமோ, அவற்றை பற்றியேல்லாம் ஆண்கள் சிந்திப்பதே இல்லை, பிடித்திருந்தால்  அவனுக்கு அவள் தேவதைதான்.

இப்படி இருக்கும் பெண்களுடன், ஆண்கள் தங்கள் வாழ்க்கையை, வேலையை பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். இது இயல்புதானே!

இந்த நாட்களில் செக்ஸ் மிகவும் மலிவானது, யார் வேண்டுமானாலும் அதை வாங்கலாம்.

உடலுறவைத் தாண்டி உங்களை நீங்கள் தயார்படுத்த வேண்டும்.
ஒப்பனைகளை விட்டுவிட்டு, ஒரு உறுதி மிக்க பெண்ணாக, பிறருக்கு சவாலாக இருங்கள்.

ஆண்கள் யோசனைகள் மற்றும் தீர்வுகளைக் கொண்ட பெண்களைத் தேடுகிறார்கள்.

*வெற்றிகரமான ஒரு ஆண் விரும்புவது மூளையுடன் கூடிய அழகு,, வெறும் மார்பகங்கள் அல்லது இடுப்பு மட்டுமல்ல.
ஏனென்றால் இவை நிரந்தரமில்லை. ஆனால் நீங்கள் கட்டியெழுப்பும் உங்கள் தனிப்பட்ட திறன்கள் காலம் கடந்து பயணிக்கும்.

உங்கள் கணவர் விரும்புவதைச் செய்யுங்கள், (சில) ஆண்களின் விருப்பத்திற்கு மட்டும் செய்யாதீர்கள்.

இந்த கட்டுரைக்கு உங்களுக்குள் மாற்று கருத்தும் இருக்கலாம், இது என்னுடைய கருத்து, உங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.