நமது வீட்டில் உள்ள பால், சர்க்கரை, ரோஸ் சிரப், ஆகியவற்றை கொண்டு உடனடியாக தயாரிக்கக்கூடிய குளிர்பானம் தான் ரோஸ் மில்க். இது வெயில் காலங்களுக்கு மிகவும் ஏற்றது. நமது உடலுக்கு கேடு விளைவிக்காத, குளிர்ச்சி தரக்கூடிய, மற்றும் குழந்தைகளுக்கு தரக்கூடிய சுவையான மற்றும் ஆரோக்கியமான குளிர்பானம்.
இதனை எப்படி நமது வீடுகளில் செய்யலாம் என இப்போ பார்ப்போம்.
இதற்கு தேவையான பொருட்கள்
பால் ஒரு லிட்டர், அதனுடன் சர்க்கரை அரை கப், ரோஸ் சிரப் 6 தேக்கரண்டி இருந்தால் போதும், வாங்க இப்போ செய்முறையை பார்ப்போம்...
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவு பால் சேர்த்து காய்ச்சிக் கொள்ளவும். பின், அந்த காய்ந்த பாலுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும். பின்னர், அதனுடன் 6 தேக்கரண்டி ரோஸ் சிரப் சேர்த்து நன்கு கலக்கவும். இப்பொழுது பாலை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
இந்த வடிகட்டிக் கொண்ட பாலை 2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறலாம் அல்லது ஐஸ் கட்டிகள் சேர்த்து உடனடியாக பரிமாறலாம். இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான ரோஸ்மில்க் ரெடி