Sex இல்லாத ஆண் நட்பு கிடைக்குமா என ஒரு குழுவில் பெண் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு பலர் அப்படி வாய்ப்பில்லை என சொல்லி இருக்கின்றனர். என்னைப் பொறுத்தவரை சின்ன சின்ன சீண்டல், கேலி எல்லா ஆண், பெண் நட்பிலும் இருக்கும்.
அட்கனக்ட் ஆகட்டும், பொது வேலைகள் ஆகட்டும் பல நேரங்களில் நான் மட்டும் பெண்ணாக இருப்பேன். அப்போ எனக்கு எந்த ஜெண்டர் வித்தியாசமும் தெரிந்ததில்லை.
பெரும்பாலும் சின்ன வயதில் இருந்து என்னை சக மனுஷியாக அணுகியவர்தான் பலர். பெண்ணாக கவனித்தவர்கள் மிகச்சிலரே. அவர்களில் சிலர் நெருக்கமாய் வர நினைத்தாலும் அடுத்தக்கட்டம் செல்ல சமூகத்தடைகள், மனத்தடைகள் மீறி செல்வது கடினம்தான். அப்படி இருக்கும் பொழுது ஆண், பெண் நட்பை அசிங்கப்படுத்துவது என செக்ஸை நான் சொல்ல மாட்டேன். அது மகிழ்வான இருப்பட்டவரின் தனிப்பட்ட விஷயம். அதில் இன்னொரு துணையின் மனக்காயம் சேர்ந்து இருப்பதால் மிக மிக கவனமாய் இருக்க வேண்டிய விஷயம்.
எனக்கு குறைந்தப்பட்சம் ஆயிரமாவது தூரத்து ஃப்ரெண்ட் என சொல்லும் ஆண் நட்புகளாவது இருக்கலாம். இதில் 20 பேர் நல்ல தொடர்பில் இருக்கலாம். 10 பேர் வேலைகளில், பர்சனலில் தினம் பயணிக்கலாம். இப்போது நான் இவர்களிடம் பேசுவது எல்லாம் பூதக்கண்ணாடி போட்டுக்கொண்டு பார்த்தால். என்னாகும் நிலைமை?
யாரும் மனைவி, குடும்பம் தவிர சக பெண்களிடம் பழகவே அச்சப்படுவர்.
பிசினஸ் உலகில் பெண்கள் இருந்தாலும் அவர்களின் முதலிட்டு அளவு 3% க்கு குறைவுதான். 97% ஆண்கள் இருக்கும் நிலை. அங்கு இருக்கும் பெண்களிடம் பழகினால் கெட்டப்பெயர் வருமெனில் ஆண்களும் ஒதுங்குவர்.
டைவர்ஸ் ஆனப்பிறகு பல கணவர்கள் எடுக்கும் ஆயுதம் இது.. ஏன் வேலைக்கு செல்லும் மனைவியை முடக்கவும் இதை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.. அதனால் ஆண்கள் பெண்களுக்கு உதவி செய்யத்தயங்குகின்றனர்.
ஒரு ஆண் ஊரைவிட்டுப்போய் நண்பணோடு தங்கி வேலைத்தேடி முன்னேற முடியும். பெண் வேலைக்கிடைத்தால் தான் தெருவையே தாண்ட முடியும்.
அவளுக்கும் நெட் வொர்க்கிங் மிக அவசியம். இப்போது ஸ்டார்ட் அப் தமிழ் நாடு நிகழ்வில் ஐம்பது பெண்கள் கலந்துக்கொள்கிறோம். ஆண்களை நட்பு செய்து, நெட்வொர்க்கிங் செய்துதான் பிசினஸ் அடுத்தக்கட்டம் கொண்டு செல்ல வேண்டும் ஆண்களுக்கும் பிசினசில் நம்பிக்கையான, கூட வரும் பார்ட்னர்களாக பெண்கள் இருப்பார்கள். இடைவெளிகளை அவரவர் நிர்மாணிக்கட்டும். ஆண், பெண் பழகுதல் பிசினஸ் சமூகத்துக்கு கூடுதல் அவசியம்
இதெல்லாம் படிக்கும் பொழுது இப்ப ஒரு எண்ணம் ஓடலாம். அதை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றும் பொழுதுதான் முன்னேறுவோம்.
தமிழ் நாடு, இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற பெண் முன்னேற்றம் அவசியம்
அதற்கு ஆண், பெண் நட்பை கொச்சைப்படுத்தவே கூடாது.
முக்கியமாய் பெண்கள்.
எதற்காகவும் இன்னொருப்பெண் பற்றி Gossip பேச மாட்டோம் என்று முடிவெடுங்கள். ஆண்களையும் சேர்த்தே நாம் இந்தப்பேச்சுகளால் முடக்குகிறோம். அவனும் எதற்கு வம்பு என நமக்கு வாய்ப்புகள் தருவதில்லை. ஏன் அவர்களுக்கும் வாய்ப்புகள் போகிறது எனவே எக்காரணம் கொண்டும், ஆண் அப்படிதான், பெண்ணை காமக்கண்ணோடு பார்ப்பான் என்ற ஸ்ட்ரியோ டைப்பில் இருந்து வெளிவாருங்கள் .
உலக அழகியாக இருப்பினும் பிடிக்காவிடில் காமம் மூளையில் துளியும் சுரக்காது.. காமம் என்பது தலைக்குள் இருக்கு.. கால்களுக்கு இடையில் இல்லை. எனவே பார்க்கும் பெண், பழகும் பெண் எல்லாம் ஆண்களுக்கு காமம் ஏற்படுத்துவள் எனச்சொன்னால் அதை விட ஆணுக்கு பெரும் அநீதி இல்லை.
பெண்ணுக்கு எப்பவும் நடப்பதுதான்.
குடும்பங்களும் இதனால் பல சிக்கல்களுக்கு உள்ளாகிறது.
ஆண் ,பெண் நட்பை நார்மலைஸ் ஆக்குவோம்.
நாம் அன்பை செலுத்தும் ஆண் இன்னொரு பெண்ணுடன் போகத் துணிந்தால் துணிந்து பை சொல்லுங்க. சந்தேகப்பட்டு வாழ்வை தொலைக்க வேண்டாம்....
நிம்மதியா இருப்போம்
அதானே வாழ்க்கை?.
நன்றி: கீர்த்தி