பாலியல் உறுப்புகள் அல்லது செயல்பாட்டின் மூலம் வெளிப்படையான விளக்கம் அல்லது காட்சி கொண்ட அச்சிடப்பட்ட அல்லது காட்சி பொருள், அவை அழகியல் அல்லது உணர்ச்சி உணர்வுகளை விட சிற்றின்பத்தைத் தூண்டும் நோக்கம் கொண்டதாக இருக்கும்.
( நம்மவர்களிடையே 18+ என கருதப்படும் )
பல்வேறுபட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில்
ஆபாசமானது மூளைக்கு தீங்கு விளைவிக்கிறது மற்றும் உறவுகளை சேதப்படுத்துகிறது என கண்டறியப்பட்டுள்ளது , அதுமட்டும் இன்றி விபச்சாரம் மற்றும் பாலியல் துஸ்பிரயோகங்கள் ஆகியவற்றுடன் தொடர்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிரூபிக்கின்றன, ஆபாசக்காட்சிகளின் மூலம் சிற்இன்பம் காண்போர் ஒரு கற்பனை உலகில் வாழ்ந்து கொண்டிருப்பதை கண்டறியப்பட்டுள்ளது.
இது பயனர்களுக்கு உண்மையான அன்பான உறவுகளை வைத்திருப்பது கடினமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில், உண்மையான அன்புக்கு ஒரு உண்மையான உருவமும் ஒரு நபரும் தேவை. ஆபாசத்திற்கு ஆளான பிறகு, மக்கள் தங்கள் நெருங்கியவரக்ளின் தோற்றம் மற்றும் அவர்களின் அன்பு குறித்து மிகவும் விமர்சிக்கின்றனர் ( முக்கியமாக கணவன் மனைவியிடையே அதிகமாக காணலாம் ) என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
உறவுமுறைகளுக்குள் இது எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றது?
• ஆபாச காட்சிகளை பார்ப்பவரை காட்டிலும் அதனை தவிர்ந்து இருப்பவர் தனது துணையை அதிகமாக நேசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது .
• . அடிக்கடி ஆபாசப் பயன்பாடு என்பது பொதுவாக அன்பைப் பற்றி இழிந்த உணர்வோடும் , காதல் துணையுடன் குறைவான நம்பிக்கையுடன் இருப்பதோடும் , இரத்த உறவுகளை விட்டு தன்னை அறியாமலே விலகி செல்வதையும் விளைவாக்கும் .
• ஆபாசப் பழக்கம் உண்மையான, தன்னலமற்ற, அர்த்தமுள்ள அன்பை வழங்குவதற்கான ஒரு நபரின் திறனைக் கடுமையாக பாதிக்கும். . ஆபாசமானது மூளைக்கு தீங்கு விளைவிக்கிறது, உறவுகளை சேதப்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது என்பதை அறிவியலும் ஆராய்ச்சியும் நிரூபித்து வருகின்றன.