இது ஒன்றும் பெரிய குற்றமல்ல. என்ன காரணங்களுக்காக அவருக்கு இது பிடித்துள்ளது என்பதை முதலில் கண்டுபிடிங்கள்.
சில ஆண்களுக்கு இயல்பாகவே காம உணர்வுகள் அதிகமாகவும், ஹார்மோன் சுரப்பு அதிகமாகும் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களுக்கு உடலுறவின் மீது எப்போதும் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும்.
மனைவியால் ஒத்துழைக்க முடியாத காலகட்டத்தில் அல்லது அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக இந்த சுய இன்ப பழக்கம் அவர் தொடர்வதற்கான வாய்ப்பு அதிகம், எனவே அதை கண்டறியுங்கள்.
அவர் உடலுறவில் போதுமான அளவு திருப்தி அடைகிறாரா அல்லது வித்தியாசமான வகைகளில் தாம்பத்தியத்தை சுவாரசியப்படுத்த விரும்புகின்றாரா என அவருடைய விருப்பத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரே மாதிரியான உடலுறவு பொசிஷன்களில் ஈடுபட்டு வரும் ஆண்களுக்கு அதன் மீதான நாட்டம் குறைந்து விடும். எனவே உங்கள் உடலுறவு பொசிஷன் களையும் அதன் மீதான விருப்பத்தையும் அதிகரியுங்கள்.
ஒரு வாரத்தில் அதிகமான தடவை உடலுறவில் ஈடுபடுங்கள். இதற்கு முன்பு ஒன்று அல்லது இரண்டு முறை ஈடுபட்டு வந்திருந்தால், தற்போது அதை நான்கு அல்லது ஐந்தாக அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும்போது உங்கள் கணவருக்கு மீண்டும் சுய இன்பம் செய்வதற்கான தேவை குறைகிறது.
உங்கள் கணவர் அதிகமாக ஆபாச படம் பார்க்கின்றாரா என்பதை கவனியுங்கள். அதிகமான அளவில் ஆபாச படங்களை பார்ப்பது அவருக்கு தூண்டுதலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். இது அவருக்கு அதிகமான காம உந்துதல் ஏற்படாத நாட்களிலும் உச்சகட்டத்தை அடைய வேண்டும் என்ற மன ரீதியான அழுத்தத்தை கொடுக்கும். இதுவும் அவர் சுய இன்பத்தை நாடுவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனை இருப்பின் ஒரு நல்ல செக்ஸ் டாக்டரை அணுகவும்.
நீங்கள் இருவரும் போதுமான அளவு நீண்ட நேர உடலுறவில் ஈடுபடுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பெரும்பாலான ஆண்கள், படுக்கையில் சீக்கிரம் உச்சகட்டத்தை அடைந்து விடுவார்கள். அதற்கு மாற்றாக சுய இன்பத்தை அவர்கள் மேற்கொள்ளும் பொழுது தனிமையில், மிக நீண்ட நேரம் ஈடுபடுவது போன்ற உற்சாகத்தையும், இன்பத்தையும் அவர்கள் பெற்றிருக்கலாம். எனவே உடலுறவைக் காட்டிலும் சுய இன்பத்தில் அதிக ஆர்வம் எடுத்துக் கொள்வார்கள்.
இவைகளில் பெரும்பாலான காரணங்களை கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசினாலே அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை மேற்கொள்ள முடியும். முடிந்தால் ஒரு நல்ல செக்ஸ் டாக்டரை அணுகி கவுன்சிலிங் எடுத்துக் கொள்வது மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.