உடல் ஆரோக்கியத்தை காப்பதில் உறங்கும் முறைக்கும் முக்கிய பங்கு உண்டு. நம் அன்றாட செயல்களே உடலுக்கு நலம்தரும் பயிற்சிகளாக மாறுவதும் உண்டு.
சிலர் அதைப்பற்றிய பெரிய புரிதல் இல்லாமலே வழக்கப்படுத்தி வைத்திருப்பார்கள், ஆரோக்கியமாகவும் வாழ்வார்கள். அது அவருக்கு இயல்பாகவே கிடைத்த அனுகூலம் எனலாம்.
அப்படிப்பட்ட ஒன்றுதான் இடப்பக்கமாக சாய்ந்து உறங்குவது. நாம் இடது பக்கத்தில் தூங்குவது தான் நல்லது. மல்லார்ந்து தூங்குபவர்கள், குப்புறப் படுத்து தூங்குபவர்கள், வலது பக்கம் திரும்பி தூங்குபவர்கள் ஆகிய அனைவரும் இனிமேல் அப்படி தூங்குவதை தவிர்க்கவும்.
இடது பக்கம் தூங்குவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் இத
உடல் வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. உணவு செரிக்க உதவுகிறது.
முதுகுவலி மற்றும் கழுத்து வலிக்கு நிவாரணம் தருகிறது.
ரத்தம் மற்றும் நிணநீர் திரவங்களை சுத்திகரித்து, வடிகட்டி நச்சுகள், கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.
திரட்டப்பட்டுள்ள நச்சுகளை எளிதாக வெளியேற்றுவதால், தீவிர நோய்களையும் தடுக்கிறது.
கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் நன்கு வேலைசெய்ய உதவுகிறது.
குடல் இயக்கங்களை மென்மைப்படுத்துகிறது. இதயத்தின் இயல்பான பணிச்சுமையை குறைக்கிறது.
அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சலை தடுக்கிறது. காலையில் சுறுசுறுப்பை கொடுக்கிறது.
கொழுப்பையும் எளிதாக ஜீரணிக்கிறது. மூளைக்கு ஏதுவான தாக்கத்தை உறங்கும்போது ஏற்படுத்துகிறது.
பார்கின்சன் மற்றும் அல்சைமர் செயல்களை தாமதப்படுத்துகிறது.
சித்த மற்றும் ஆயுர்வேத முறைகளிலும் இந்த உறக்கநிலை போற்றப்படுகிறது.
இடப்பக்கமாக இருதயம் இருக்கிற காரணத்தால், அதை கீழாகவும் வலப்பக்கம் மேலாகவும் சாய்ந்து உறங்கி எழுந்தால் புத்துணர்ச்சியை உணர்வீர்கள்.
அதற்கு காரணம், உறக்கத்தில் சீரான ரத்த ஓட்டம் அமைவதுதான். அந்த ஒரு பலனில்தான் மேற்சொன்ன 15 பலன்களும்.
இன்னும் இதை விளக்கினால் பலன் எண்ணிக்கை கூடும். மாறாக, வலதுபக்கமோ, மல்லாந்து, குப்புற என எப்படி படுத்திருந்தாலும் உறங்கிய திருப்தி இல்லாத நிலையையே விழித்ததும் உணர்வீர்கள்.
இனியாவது உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளலாமே!