இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணம் வாயுக்கள் அதிகம் உள்ள உணவு பொருட்களை நாம் உண்பதே.
குறிப்பாக ப்ரோக்கோலி, பீன்ஸ், குளிர்பானங்கள், காலிஃளார் போன்றவை முதன்மையான காரணிகளாக உள்ளது. மேலும், இந்த நிலை உங்களுக்கு மலச்சிக்கல், வாயு தொல்லை, வயிறு உப்பசம் என பல கோளாறுகளை தரும்.
சீமை சாமந்தி டீ
வயிறு உப்பி கொண்டே போவதை விரைவிலே குணப்படுத்த இந்த சீமை சாமந்தி டீ உதவும்.
செய்முறை :- நீரை கொதிக்க விட்டு அதில் சீமை சாமந்தி பூவை போடவும். 5-10 நிமிடம் கொதிக்க விட்டு, ஆறியவுடன் வடிகட்டி கொள்ளவும். இந்த டீயுடன் தேன் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம். தினமும் 2 அலல்து முறை இந்த டீயை குடித்து வந்தால் எளிதாக வயிற்று உப்பசத்தை குறைத்து விடலாம்.
இஞ்சி டீ
வயிற்று உப்பி கொண்டிருக்கும் பிரச்சினைக்கு வேறொரு அற்புதமான தீர்வு இந்த இஞ்சி தான். தண்ணீரை கொதிக்க விட்டு அதில் சிறிது இஞ்சியை நசுக்கி போடவும். 5 நிமிடம் கொதிக்க விட்ட பின், இதனை வடிகட்டி கொள்ளவும். பிறகு இவற்றுடன் தேனை கலந்து குடித்து கொள்ளலாம்.
புதினா டீ
உங்களின் பிரச்சினையை மிக சுலபமாக குணப்படுத்த கூடிய ஆற்றல் இந்த புதினா டீயிற்கு உள்ளது.
செய்முறை :- முதலில் நீரை கொதிக்க விட்டு, பிறகு கை நிறைய புதினா இலைகளை அந்த நீரில் போடவும். 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்து வரலாம்.
இவ்வாறு ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வருவதால் செரிமான பிரச்சினை, வயிற்று உப்பசம் போன்ற பல பிரச்சினைகள் குணமாகும்.
நம் வீட்டில் இருக்கும் இந்த எலுமிச்சையை வைத்தே நாம் வயிற்று உப்பசத்தை எளிதாக குணப்படுத்தி விடலாம். அதற்கு, முதலில் நீரை கொதிக்க விட்டு அதில் எடுத்து கொள்ளவும்.
பிறகு இதனுடன் எலுமிச்சை சாற்றை 1 ஸ்பூன் & தேன் கலந்து குடித்து வரவும். இதனை தினமும் காலையில் குடித்து வந்தால் விரைவாக உப்பிய வயிறு குறைந்து விடும்.