பருவநிலை மாறும் இந்த நேரத்தில் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவை. எனவே, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். வெள்ளரி, தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.
தண்ணீர் சத்து அதிகம் உள்ள பழங்கள் தர்பூசணி, வெள்ளரி, கிர்ணிப்பழம், அன்னாசிப்பழம், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, இளநீர் போன்றவை.
பேரிக்காய்:
பேரிக்காய்களில் சுமார் 84 சதவீதம் நீர் உள்ளது. இதனை எடுத்து கொள்ளும் போது நம் உடலின் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் அவற்றின் இதிலிருக்கும் நார்ச்சத்து சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது.
மேலும் பேரிக்காய்கள் நமக்கு வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை அளிக்கின்றன.
இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்ஸை எதிர்த்து போராட உதவும்.
தர்ப்பூசணி:
சுமார் 92 சதவீதம் தண்ணீரை கொண்டிருக்கும் தர்ப்பூசணி பழம் நம்பமுடியாத அளவிற்கு ஹைட்ரேடிங் தன்மையை கொண்டுள்ளது.
தர்ப்பூசணி பழத்தில் முக்கிய அத்தியாவசிய வைட்டமின்களான ஏ மற்றும் சி உள்ளன, இது சரும ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது.
மேலும் தர்ப்பூசணி பழமானது அழற்சி மற்றும் கேன்சர் அபாயத்தை குறைக்க உதவும்.லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை கொண்டுள்ளது.
ஸ்ட்ராபெர்ரிக்கள்:
சுவையான ஸ்ட்ராபெர்ரிக்களில் சுமார் 91 சதவிகிதம் தண்ணீர் உள்ளது, இதனால் இவை நம் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்த பெர்ரிக்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஃபைபர் சத்து நிறைந்துள்ளது,
இவை கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைங்க உதவுகிறது. அதே நேரம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
மாம்பழம் :
இந்த சீசனல் பழம் கோடையில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாகும். இதில் 80 சதவீதம் தண்ணீர் உள்ளது.
மேலும் இது ஆன்டி-ஆக்சிடன்ட் பண்புகளை கொண்டுள்ளது. மாம்பழம் பார்வை திறனை மேம்படுத்த மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
வெள்ளரி காய்:
கொளுத்தும் கோடை வெயிலுக்கு மற்றொரு சிறப்பான உணவு வெள்ளரி.
விலை மலிவான அதே சமயம் அதிக நீர்சத்து கொண்ட வெள்ளரியை வெயில் நாட்களில் தினசரி சாப்பிடுவது உடலை டிஹைட்ரேட் ஆகாமல் தடுக்கிறது.
மேலும் பளபளப்பான சருமத்தை பராமரிக்க, அசிடிட்டி ஏற்படாமல் தடுக்க வெள்ளரி உதவுகிறது.