Breaking News :

Friday, May 02
.

சுய இன்பமே மேலானதா?


இங்கு ஆண்களுக்கு திருமணத்திற்கு முன்பு.  அந்த ஆணிடம் ஒரு குடும்பத்தை வழிநடத்த கூடிய அல்லது ஒரு பெண்ணுக்கு தேவையான உணவு, உறைவிடம், வாகனம் அதற்கான பணம், வேலை இருக்கிறதா என்று துருவி துருவி பெண்ணின் வீட்டார் விசாரித்து தெரிந்து கொள்வர்.

அதே தகுதி கலவியில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள யாருக்கும் விருப்பம் இல்லை.

இங்கு ஆண்களுக்கு திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை கலவியில் திருப்தி படுத்தும் அளவுக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு தேர்வு வைத்தால் 99% சதவிகித ஆண்கள் தேர்வில் தோல்விதான் அடைவார்கள்.

திருமணத்திற்கு ஆண் என்ற தகுதி இருந்தால் போதும் இங்கு திருமணம் நடந்துவிடும்.  அவன் கலவியில் எத்தகைய திறமை இருக்கிறது என்று பார்ப்பதில்லை.

ஒரு பெண்ணால் இந்த காலத்திலும் நீ எனக்கு சரியாக இன்பம் கொடுக்கவில்லை என்று தைரியமாக சொல்லக்கூடிய பெண் இன்னும் பிறக்கவில்லை.

தப்பி தவறி அவள் சொல்லிவிட்டால் அதை ஆணின் ஈகோ ஏற்க மறுத்து அவளை ஒரு தவறான பெண்ணாக உருவாக படுத்திவிடுகிறான்.

இன்னும் சில ஆண்கள் உனக்கெல்லாம் எதற்கு இன்பம் என்று தன் இயலாமையை மறைத்து விடுகின்றனர்.
இவ்வாறு ஒரு பெண்ணை ஒரு உணவு பண்டமாகவே நினைத்து அவளை உண்டு விடுகிறான்.

இதனால் பெண்ணிற்கு கலவியில் எந்தவித சுகமும் ஏற்படாமல் தன்னை ஒரு உணவு பொருள் போல் உண்ணுவதை எந்த பெண்ணும் விரும்புவது இல்லை.

கலவியில் பயிற்சி பெறாத, கலவி அறிவு இல்லாத ஆணிடம் முதன் முதலில் முதல் இரவில் பாலுறவு கொள்ளும் போது அவள் கலவியை வெறுத்தே விடுகிறாள்.

பெண்கள் பல நாள் கனவு ஒரே நாளில் தகர்க்கப்படுகிறது. இதற்கு தானா இவ்வளவு ஆடம்பரமான திருமணம், விதவிதமான உணவு, உறவினர்கள் கூட்டம், நட்சத்திர விடுதி, நகைகள், அலங்காரங்கள் அணைத்து ஒரே இரவில் தவறான பாலுறவால் பெண்ணின் மனதில் அனைத்தும் கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

அடுத்த நாள் பாத்துக்கொள்ளலாம் என்று பெண் மனதை தேற்றிக்கொண்டு செல்கிறாள் ஆனால் இந்த நிலை வாழ்கை முழுவதும் என்று அவளுக்கு புலப்படும் போது அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை.

ஆனால் அன்பின் நிமித்தமாக அல்லது வேறு வழியின்றி, நிர்பந்தத்தினாலோ தன்னை ஒரு ஆண் உபயோகப்படுத்தி கொள்ள அனுமதிக்கிறாள்.  ஆனால் காலம் செல்ல செல்ல அவளுக்கு தான் பாலுறவிற்காக பயன்படும் ஒரு இயந்திரம் போல் இருப்பதுபோல் அவள் தன்னை தானே உணர்கிறாள்.  அவளுக்கு இத்தகைய இயந்திர தனமான உறவில் வெறுப்பும், சலிப்பும், எரிச்சலும் அடைகிறாள்.

பொறுத்து போகும் மனநிலையையும் தாண்டி விடுகிறாள். அதனால் பாலுறவை தவிர்ப்பதற்காக தலை வலி, வேலை, குழந்தைகள் என்று பல காரணங்களை சுட்டி காட்டி பாலுறவில் இருந்து தப்பிக்க பார்க்கிறாள். தனக்கு கிடைக்காத பாலுறவு இன்பத்தை கணவனுக்கும் கொடுக்க மறுக்கிறாள்.

இதில் குடும்ப சண்டைகள், மாமனார், மாமியார் கொடுமைகள், கணவனின் அலட்சியம், குழந்தைகளின் வளர்ப்பு, குடும்ப வேலை பளு, கணவன் வீட்டாரின் உறவினர்களின் ஏளன பேச்சு இவை அனைத்தையும் மனதில் வைத்து  கணவனின் பாலுருவிற்கே ஒரு முற்று புள்ளி வைத்து கணவனை பழிவாங்கவும் செயல் வாழ்நாள் முழுவதும் ஏன் கணவன் மரணம் வரை பழிவாங்கும் பெண்ணாகவே மாறுகிறாள்.

பாலுணர்வினால் ஏற்படும் அன்பு எவ்வாறு சக்தியுடையதோ அதே போல் பாலுணர்வால் ஏற்படும் காழ்ப்புணர்ச்சி எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொடுமைப் படுத்தும் என்பது ஆண்களுக்கு தெரிவது இல்லை.

இதனால் பொண்டாட்டி என்றாலே கொடுமைக்காரி என்று இந்த சமூகம் பெயரும் கொடுத்து அதை நகைச்சுவையாகவும் பல இடங்களில் கூறி கொள்கிறது.  ஆனால் இது நகைச்சுவைக்கு உட்படுத்தவேண்டிய விஷயம் இல்லை.

மீறி இந்த பெண்களிடம் உறவு கொள்ளும் போது, அவள் ஒரு ஜடம் போல் படுத்துகிடப்பால், உடலுறவில் வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வாள், கணவன் மட்டும் இயங்குவது போல் அவன் வெறுப்பு அடைவான், கணவனின் பாலுறவை அலட்சியப்படுத்துவாள். இதை தான் ஒரு பாலியல் கருத்து கூறுகிறது.  இந்த மாதிரி பெண்களிடம் உறவு கொள்வதை விட சுய இன்பமே மேலானது என்கிறது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.