திருநீற்றுப் பச்சிலை செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் இலைகள், விதைகள், சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தி பல நோய்களுக்கு நிவாரணம் அளிக்கலாம்.
இதன் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாகும். இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிடலாம்.
இதன் விதைகளை சிறிது எடுத்து கழுவி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க காய்ச்சல் குணமாகும். வயிற்றுவலி, கண் எரிச்சல், சிறுநீர் எரிச்சல், அடைப்பு போன்ற உபாதைகளுக்கு நிவாரணம் அளிக்கும். தாதுவெப்பத்தைக் குறைக்கும்.
இது உத்திரசடை, பச்சை, விபூதிபச்சிலை, சப்ஜா, திருநீற்று பத்திரி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. இதில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, சத்துக்கள் உள்ளன.
இது லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் தாவரவியல் பெயர் 'ஆஸிமம் பேசிலிகம்' (Ocimum basilicum).