Breaking News :

Monday, May 05
.

உடலுறவுக்கு முன்பின் ஆண்கள் என்ன செய்யணும்?


ஆணுறுப்பு மிகவும் சென்சிடிவ்வானது. எனவே மிகவும் கவனமாக அவ்விடத்தை சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆண்குறியின் முனையில் தான் அதிக அழுக்குகள் சேரும். மேலும் அவ்விடத்தில் தான் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகும். எனவே அவ்விடத்தை மென்மையான சோப்பு கொண்டு தினமும்தவறாமல் கழுவ வேண்டும்.

மேலும் ஜிம் சென்றுவிட்டு, வீடிற்கு வந்ததும் கழுவ வேண்டியது முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியின் போது அதிகம் வியர்த்திருப்பதால் கழுவ வேண்டும்.

அந்தரங்க பகுதியில் வளரும் முடியை அவ்வப்போது ட்ரிம் அல்லது ஷேவிங் செய்துவிட வேண்டும். ஏனெனில் முடி இருந்தால், அதிகம் வியர்க்கும்.அதுமட்டுமின்றி முடி அதிகம் இருந்தால், அப்பகுதியில் பொடுகு, பேன் போன்றவை தாக்கக்கூடும்.எனவே மாதம் ஒரு முறை தவறாமல் ட்ரிம் அல்லது ஷேவிங் செய்ய வேண்டும்.

உடலுறவு கொள்ளும் முன்னும் சரி, பின்னும் சரி மறக்காமல் கழுவ வேண்டும். இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் பொருந்தும். முக்கியமாக உடலுறவுக்கு முன் ஆண்கள் கழுவ வேண்டியது அவசியம்.

ஏனெனில் ஆண்குறியின் முனையில் இருக்கும் ஒருவித திரவமானது துணைக்கு தொற்று்களை ஏற்படுத்தும்.எனவே தவறாமல் உறவுக்கு முன்னும், பி்உம் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.

சுய இன்பம் காணும் ஆண்கள், அதற்கு பின் கட்டாயம் கழுவ வேண்டும். இதனா் அப்பகதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதை தவிர்ப்பதோடு பூஞ்சையின் வளர்ச்சியையும் தவிர்க்கலாம்.

ஆண்குறியின் மேல்தோலுக்கு அடியில் சுத்தமாக கழுவ வேண்டியது மிகவும் முக்கியம். ஏனெனில் அந்த இடம்தான் பாக்டீரியாக்கள் அதிகம் வளர்வதோடு, சேரவும் செய்யும். முக்கியமாக அந்த இடத்தை கழுவும் போது கவனமாக இருக்க வேண்டும்.

அந்தரங்க பகுதியில் காற்றோட்டம் இருக்கும்படி செய்ய வேண்டியது அவசியம். அதற்கு இரவில் படுக்கும் போது உள்ளாடை அணிவதைத் தவிர்க்கவும். இதனால் அப்பகுதியில் வியர்ப்பதை தவிர்பதோடு, துர்நாற்ம் வீசுவதையும் தவிர்க்கலாம்.

ஆணுறைப்பின் முன் பகுதியில் மாவுமாவாக உள்ள ஸ்மெக்மா என்ற மாவுப்பொருள் கடுமையான துர்நாற்றத்தை ஏற்படுத்தும். இதனை அவ்வப்போது முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அது ஆண்குறியை சிவக்கச் செய்வதோடு, வீக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் அந்த ஸ்மெக்மா ஆணுறுப்பு புற்றுநோயைக்கூட உண்டாக்கும்.

தினமும் குளிக்கும் போது உள்ளாடையை வெறும் நீரில் அலசாமல், சோப் பயன்படுத்தி, சுடுநீரில் அலசி உலர வைக்க வேண்டும். குறிப்பாக காட்டன் உள்ளாடையைப் பயன்படுத்துவதே சிறந்தது. இதனால் வியர்வையை காட்டன் உறிஞ்சி அவ்விடத்தில் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub