Breaking News :

Tuesday, April 15
.

சாப்பிட்டவுடன் நடப்பது நல்லதா?


ஒவ்வொரு உணவு வேளைக்கு பிறகும் 10 முதல் 15 நிமிடம் நடப்பது மிகவும் நல்லது.

சாப்பிட்ட உடனேயே நடப்பது அமில வீச்சு மற்றும் உங்கள் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிடதும் 30-45 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நடக்க ஆரம்பிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உணவுக்குப் பிறகு வேகமாக அல்லாமல் மிதமான வேகத்தில் நடக்க வேண்டும்.

ஏனெனில் தீவிர உடற்பயிற்சிகள் தசைகள் மற்றும் இரைப்பைக் குழாயிலிருந்து அதிக இரத்தத்தை இழுக்கக்கூடும். இது உங்கள் செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

மற்ற நேரங்களில் நடப்பதை விட சாப்பிட்ட பிறகு நடப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இது செரிமானத்திற்கு உதவுகிறது.

இரத்த சர்க்கரையை குறைக்கிறது மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்கிறது.

நீங்கள் சாப்பிட்ட பிறகு, உங்கள் உடல் செரிமான வேலையை செய்யத் தொடங்குகிறது.

உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடைத்து தேவையானதை உறிஞ்சிவிடும்.

பின் அந்தந்த உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை பிரித்து அனுப்பும்.

உணவின் ஊட்டச்சத்துக்களை உடைக்கும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க அளவு செரிமானம் சிறுகுடலில் நடைபெறுகிறது.

எனவே அந்த சமயத்தில் சாப்பிட்ட பிறகு நடப்பது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு விரைவாக உணவுப் பரிமாற்றம் நிகழ உதவுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது

அப்படி உங்கள் வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு உணவு எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அந்த அளவு வீக்கம், வாயு மற்றும் அமில எதிர்ப்புபோன்ற பிரச்சனைகளே வராது.

உணவுக்குப் பின் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி செய்வது, குடல் செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்று சான்றுகளும் இருக்கின்றன.

உணவுக்குப் பிந்தைய நடை பயிற்சி செரிமான அறிகுறிகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு, உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி, ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

எந்த உடல் செயல்பாட்டில் ஈடுபட்டாலும் எண்டோர்பின்கள் அல்லது நல்ல ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும் , இதனால் உடல் தசைகள் தளர்வடைகிறது. எனவே இதற்கு நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது.

எனவே உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என மற்றவர்களிடம் தைரியமாக சொல்லுங்கள்.

நீங்களும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.