Breaking News :

Sunday, May 04
.

மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது?


இரவு வீடு திரும்பியவுடன் கை காலை கழுவிட்டு காலாகாலத்துல சாப்பிட்டு முடித்துவிட்டு சீக்கிரம் உறங்கச் செல்ல வேண்டும்.(எங்களுக்கு தூக்கம் கண்ணை கட்டுவதை புரிஞ்சிக்கணும்)

30 நாளைக்கு நீங்க வாங்கி போட்ட சமையல்சாமான்கள் எல்லாம் இந்த மாதம் 20 நாளிலேயே முடிந்து விட்டது. (விருந்தாளி வருகையினால்) வீட்டில் என்ன இருக்கிறது? இல்லை? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளனும்.

நீங்க_காலையில் வேலைக்கு போகும் போது கால் வலிக்குது என்று சொன்னேனே? இப்போது வலி எப்படி இருக்கிறது என்று விசாரிக்கனும்.

ஏய்.. வரும் வழியில் உங்க அண்ணனை பார்த்தேன். வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் பிள்ளைக்கு வளைகாப்பாம். விசேஷத்துக்கு சொல்ல நாளைக்கு வருவாரு. அதை உனக்கு சொல்லச் சொன்னாரு. என்று தினசரி நிகழ்வுகளை சிரித்த முகத்தோடு பேசணும்.

ஏங்க.. பெரியவனை நினைச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க. எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுறான். என்றால்.. அவனைப் பத்தி நீ ஏன் கவலைப் படுற? எல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று தைரியம் சொல்லனும்.

இன்னைக்கு என்ன சமைக்கட்டும் என்று கேட்டால்..யம்மா; மதியத்திற்கு மட்டும்-உன்னால் சுலபமாக எதை செய்ய முடிகிறதோ அதை செய்தால் போதும். நைட் வரும்போது கொத்து புரோட்டா வாங்கி வருகிறேன். நாம எல்லாரும் ஜாலியா சாப்பிடலாம். என்று சொல்லணும்.

இன்று என்ன உனக்கு முகம் டல்லா இருக்கு? மனசு என்னவும் சரி இல்லையா? அப்படியே மெதுவா செட்டியார் கடை வரை பேசிக்கிட்டே..நடந்து போய்-வீட்டுக்கு தேவையானது ஏதாவது வாங்கி வருவோம் வா. என்று முதுகை தட்டி கொடுத்து பேசணும்.

அங்க இங்க கிடக்குற பணத்தை எல்லாம் ஒண்ணா சேர்த்து எண்ணிப் பார்த்தேன். Tow Lana தேறும். அதை என்ன செய்யலாம் சொல்லு. என்று கேட்கணும்.

நேத்து யூடியூபில் புதிய-டிஸ் ;ஒன்று பார்த்தேன். என்னவோ சப்பாத்தியை கல்லிலே லேசாக வழக்கம்போல் எண்ணையைத் தடவி பாதி சுட்ட பிறகு எடுத்து அதை நெருப்பில் மறுபடி சுட்டு எடுக்கணுமாம். அதன் பெயர் என்னவோ புட்லா என்று சொன்னார்கள். இன்று உனக்கு நைட் டிபன் அதுதான். நானே செய்யப் போகிறேன். என்று சொல்லனும்.

ஆடியோவில்.. எங்க வீட்டு ராணிகிப்போ இளமை திரும்புது. வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது_என்று பாட்டை போட்டு கேட்டு ரசிக்கணும்.
மற்றபடி.. அவங்களுக்கு தேவையான திங்ஸ்..சேரீஸ்.. கை செலவுக்கு கொஞ்சம் பணம்.. இதெல்லாம் நாங்க கேட்காமலே கொடுத்திறனும்.

முடிந்தால் அவ்வப்போது.. வடிவேலு போன்று பல உருட்டுகளாக காமடி பண்ணனும்..!

இதெல்லாம் எந்த வீட்டுல நடக்குது?? சந்தையிலே (திருமணம்) ஏலத்துக்கு எடுத்து, சாவடியிலே (அடுப்படி) குத்தகைக்கு விட்டு, எங்களைமொத்தமாக விலைக்கு வாங்கியது போல.. வெட்டி அதிகாரம் தானே நடக்குது?
மகளே கவலைப்படாதே  இப்பதானே உன் மாப்பிள்ளைக்கு வயது 50 ஆயிருக்கு. உன் அருமை போக போக புரிஞ்சுக்குவாரு. தைரியமா இருமா!!

நான் வீட்டுக்கு சீக்கிரம் போகணும் அம்மா என்னை தேடப் போறா.. வரட்டுமா?

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub