திருமணம் என்பது கணவன் மனைவிக்கும் இருக்கும் நெருக்கமான உறவாகும் . ஆனால், ஏனோ திருமண வாழ்க்கை பலருக்கு சந்தோசத்தை அளிப்பதில்லை . மனைவியின் ஏக்கமும், எதிர்பார்ப்பும் என்ன?
கவனமும் அன்பும்
உங்கள் மனைவிக்கு உங்களுடைய முழு கவனம் முக்கியம். உங்கள் மனைவி உங்களோடு பேசும் போது, அதை கவனமாக கேட்பது அவளை சந்தோஷத்தில் ஆழ்த்தும் . உங்கள் மனைவி உங்களோடு இருக்கும் போது, அவளை கவனிக்காமல், டிவியிலும் உங்கள் கவனத்தை செலுத்தினால், அவள் தனிமையை உணர்வாள்.
மென்மையான ஆதரவும் பாசமும்
உங்கள் மனைவி கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், அவளுடைய கண்ணீரை அலட்சியப்படுத்தாதீர்கள். உங்கள் மனைவி மனம் தளர்ந்து இருக்கும் போது அவள் தோளில் நீங்கள் போடும் ஆதரவான கை, உங்கள் காதலை அவளுக்கு பட்டவர்த்தனமாக காட்டும்.
நட்பும் வெளிப்படையான பேச்சும்
உங்கள் மனைவியோடு நீங்கள் ஒரு வித விலகளோடு நடந்து கொண்டால், அவள் படும் வேதனை சொல்லில் அடங்காது. உங்கள் மனைவியிடம் உங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொண்டால் தான் உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக அவள் உணர்வாள். மற்றவர்களோடு சிரித்து சிரித்து பேசும் நீங்கள் உங்கள் மனைவியிடம் அந்த சிரிப்பை காட்டுவதில்லை. இது நீங்கள் செய்யும் மிக பெரிய தவறு.
மனைவியின் லட்சியங்களுக்கு துணை நிற்பது
உங்கள் மனைவிக்கும் வாழ்க்கையில் இலட்சியங்கள் இருக்கும். அதற்கு முட்டுக்கட்டை போடாமல், உங்கள் மனைவியை உற்சாக படுத்தினால், அவளின் சந்தோசத்திற்கு அளவே கிடையாது.
உங்கள் மனைவியின் உழைப்பை பாராட்டுவது
உங்கள் மனைவி உங்களை பார்த்து கொள்வாள், உங்கள் குழந்தைகளை பார்த்து கொள்வாள் . இன்னும் சொல்ல போனால் உங்கள் குடும்பத்தையே தூண் போல் தங்கி பிடித்து கொண்டு இருப்பாள். ஆனால், அவள் தன் கடமையை தானே செய்கிறாள் என்று நீங்கள் அவள் உழைப்பை கண்டு கொள்வதில்லை . இந்த தவறை செய்யாதீர்கள். குடும்பத்திற்கான உங்கள் மனைவியின் பங்களிப்பை பாராட்டுவது உங்கள் கடமை.
மனைவியின் உணர்ச்சி தேவைகளை அறிந்து அதற்கு தக்கவாறு கணவர் நடந்து கொண்டால், அவள் கொடுக்கும் அன்பும் ஆதரவும் அளப்பறியாதது. இதை பல ஆண்கள் புரிந்து கொள்வதில்லை என்பது தான் உண்மையிலும் உண்மை.