கலவியில் உருவாகும் காம சக்தியை மக்கள் அனைவரும் அனுபவிக்கவேண்டும் என்று தான் கோயில்கள், சிற்பங்கள் காம சூத்ரா போன்ற புத்தகங்கள் உலகம் முழுவதும் அறிவார்ந்த நம் முன்னோர்கள் இந்த சமூக்த்திற்காக உருவாக்கினார்கள்.
ஆனால் இடைக்காலத்தில் காமத்தை அடக்கினால்தான் இறைவனை காணலாம் என்று பல தத்துவரீதியான கோட்பாடுகள் உருவாக்கபட்டது அதை மக்களிடம் புகுத்தப்பட்டது, பாலியல் ரீதியான அறிவுரைகள் நிறுத்தப்பட்டன.
படி படியாக காமம் என்பது சந்ததி உருவாக்கத்திற்கு மட்டும்தான் என்று வரையறுக்கப்பட்டு. கணவன் மனைவி கூட அவசரம் அவசரமாக பாலுறவு செய்து 15 முதல் 20 குழந்தைகளை பெற்று எடுத்தார்கள்.
காமம் கலவி பற்றி பேசுபவர்களை தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கும் நபர்களும் இன்னமும் இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களை ஏளனப்படுத்துவதும், குற்றவுணர்வு ஏற்படுத்துவதும், பொது இடத்தில் அசிங்கமானவன் என்று சுட்டிக்காட்டவும் பல பேர் இன்னும் உள்ளனர்.
ஆனால் இதை பற்றி அறிந்தும், இதற்கெல்லாம் கவலைப்படாமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல பாலியல் மருத்துவர்கள் பொது வெளிகளிலும், புத்தகங்கங்களிலும், காணொளிகளிலும் தங்கள் கருத்துகளை தெரிவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இதனால் ஒரு காலத்தில் பாலுறவில் உச்ச கட்டம் இன்பம் என்பதே இல்லை என்ற முடிவுக்கு வந்த காலமும் உண்டு
உச்ச கட்டம் இன்பம் என்பதே இல்லை என்று மனிதர்கள் கலவி மேற்கொண்டார்கள் பல குழந்தைகளை இயந்திரத்தனமாக பெற்றார்கள். பல கோடி பெண்கள் பாலுறவில் உச்ச இன்பம் அனுபவிக்காமலேயே இறந்தவர்களும் கோடான கோடி பேர்கள்.
20ம் நூற்றாண்டில் காமம் பெரும் பாவமாக சமுதாயத்தில் கட்டமைத்தனர். பாலுறவில் ஒரு சிலருக்கு மட்டும் தாராளமாக சலுகைகள் கொடுக்கப்பட்டது. பெண்கள் வலுக்கட்டாய படுத்தப்பட்டனர்.
ஆண்களே காமத்தை பற்றி பேசக்கூடாது என்ற நிலையை உருவாக்கினார்கள்.
உணவு, உடை, இருப்பிடம் தன்னிறைவு அடையும் போது இயல்பாக காம உணர்வுகள் அரங்கேறும் அதனால் மக்களை பசி, பட்டினி, பஞ்சம், வாழ்கை போராட்டத்தில் சிக்குண்டநிலையில் மக்களை வைத்திருந்தினர்.
ஒரு பெண்ணை ஒரு ஆண் சுலபமாக பாலுறவில் திருப்தி படுத்த முடியாமல் இருந்ததால் பெண்களை வேறு வழியில் தடுத்து நிறுத்தினர் அதனால்,
குறிப்பாக பெண்கள் காமத்தை பற்றி பேசுவதும், அவர்களாகவே பாலுறவில் இயங்கவுது மிகவும் தவறானது என்று சிறுவயதில் இருந்து வளர்க்கப்பட்டார்கள்.
அவள் பாலுறவில் முணங்குவது கூட அவளுக்கு மறுக்கப்பட்டது. பெண் முனங்கினாள் இவள் காம பேய் பிடித்தவள் என்று ஒரு சமூகம் தூர்த்தியது.
காலங்கள் உருண்டு ஓடின பாரதி போன்றவர்களால் பெண் விடுதலை, பெண் வீட்டை விட்டு கல்வி கற்க, சமுதாயம் மாற்றம் உருவாக்க வெளியே வருவது இன்றிமையாத சூழலாக அமைந்தது.
பெண் அனைத்தையும் கற்றால், ஆணைவிட திறமையானவள் என்று ஒவ்வொரு துறைகளிலும் நிருபத்திக்கொண்டு இருக்கிறாள் இந்த யுகத்தில்.
அதனால் பொருளாதாரம் சுகந்திரம் அவளுக்கு கிடைத்துவிட்டது. ஒரு ஆணை பொருளாதாரத்திற்காக எதிர்பார்த்த காலம் முடிந்து விட்டது.
அதனால் காமம் பற்றி அறிந்து கொள்ள இன்றைய தலைமுறையினர் ஆர்வம் கொள்கின்றனர், மருத்துவமனை நோக்கி, பல பாலியல் மருத்துவ கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.