நன்கு படித்த அலுவலகத்தில் நன்கு உயர் அதிகாரியாக ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் பணியில் மிகவும் சிறந்து விளங்கும் பெண், மிகவும் அழகான பெண்ணும் கூட, நன்கு உடை அணிகலன்கள் அணியும் நாகரிகமான பெண்ணும் கூட திருமணமான புதிதில் நன்கு அன்போடும், காதலோடும் மகிழ்ச்சியாக வளம் வந்த பெண்.
ஆனால் சில வருடங்களாக வீட்டிற்கு வந்தால் மட்டும் எப்போதும் சிடு சிடு என்று தன் கணவரிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்வாள்.
குழந்தைகளை அடிப்பது, கணவனிடம் சண்டையிடுவது, தன் வீட்டாரிடம் கூட எரிச்சல் காட்டுவது, கோபப்படுவது.
எல்லா வேலைகளையும் ஒரே நேரத்தில் தனக்கு தானே தன்னை வருத்தி கொண்டு எதோ மன நலம் பாதித்தது போல் வாழ்க்கை நடத்தி கொண்டு இருந்தார். நிலைமை எல்லை மீறி போகவே குடும்பத்தார்கள் மனநல பாலியல் மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
அவரை ஆய்வு செய்த மருத்துவர்கள் உடல் நலம் மிகவும் நன்றாகவே இருந்தது. முடிவில் அவருக்கு பாலியல் சார்ந்த வெளிப்பாடு பல வருடங்களாக ஒடுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரால் அவரின் பாலியல் ஆசைகள் அனைத்தையும் அவரின் கணவரிடம் அனுபவிக்க முடியாமல் அவருக்கு பாலியல் சார்ந்த இன்பம் அவருக்கு கிடைக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு பெண்ணுக்கு பாலுறவில் அதிக நாள் இன்பம் கிடைக்கவில்லை என்றால் அந்த அடக்கப்பட்ட பாலுறவு ஆற்றல் வேறொரு ஆற்றலாக மாறுகிறது (LIPIDONAL ENERGY) காரணமாகவே மனதில் ஒரு வித அடக்குமுறையில் இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்று கண்டு அறியப்பட்டது.
அந்த பெண் மிகுந்த கல்வி அறிவு பெற்றாலும், அவருக்கு பாலியல் சார்ந்த இன்பம் தெரிந்து இருந்தும் அதை எவ்வாறு தன் கணவனிடம் அனுபவிக்க வேண்டும் என்று தெரியாததால் அவருடைய ஆசைகள் அனைத்தும் அவர் மனதில் அடைக்கிவைப்பதால் அது பூகம்பம்மாக மாறியிருக்கிறது. இது அவருக்கு மட்டும் இல்ல, 80% சதவீத பெண்கள் பாலுறவு உச்ச இன்பம் என்னவென்றே தெரியாமல் பாலுறவு கொள்வதாக ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.
சங்க காலம் எனப்படும் இரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், பாலியலை மிகவும் இன்றியமையாத இயற்கையான ஒன்று என்று கருதினர்.
அதனால் தான் பாலுறவை ஒரு கலையாக (Eroctism) பார்த்து ரசித்து வாழ்ந்தார்கள். பாலியல் ஆர்வம், பாலுறவு, பாலுறவில் ஆண் பெண் அனுபவிக்க கூடிய இன்பம் என்று மூன்றாக அதில் ஏற்படும் இன்பங்களை சங்க இலக்கியங்கள் முக்கியத்துவம் தந்து உள்ளன.
நிலவை பிடித்துத்தரவா, வானத்தை வளைக்கவா என்று நடக்கூடிய காரியமில்லை என்று தெரிந்தும் காதலன் தன் காதலியிடம் இருக்க ஆசைப்பட்டு காதலன் எதை வேண்டுமென்றாலும் செய்ய தயாராக இருக்கின்றான் என்று உறுதியாக கூறுகிறான்.
அவளுடன் ஒரு நாள் வாழும் இன்பம் கிடைத்தால் கூட போதும் என்று ஒரு காதலன் பிதற்றுகிறான், கடலால் சூழப்பட்ட இந்த உலகம் கிடைத்தாலும் அவள் மார்போடு சாயும் இன்பம் அதற்கு ஈடுஇணை இல்லை என்று ஒரு கவிஞன் பாடுகிறான்.
.
பெண்ணுக்கு பாலுறவில் அதிக நாள் இன்பம்..?

.