உங்கள் நட்சத்திரத்தின் சின்னம் 'ரத்' மற்றும் இந்த நட்சத்திரக் கூட்டத்தின் தெய்வம் பிரம்மா ஜி. இந்த ராசியை ஆளும் கிரகம் சந்திரன்.
ஆண்டின் முதல் பகுதி சிறப்பாக இருக்கும். மிகுந்த நம்பிக்கையையும் செழிப்பையும் தரும். ஆண்டின் முதல் பாதியில் ஆரோக்கியத்தை நீங்கள் கண்காணிக்கவில்லை என்றால் உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும்.
தொழில் வாழ்க்கையில் சிறப்பாக செயல்படுவீர்கள். தொழிலில் சிறந்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். திருமணமாகாத ரோகினி ஜாதகக்காரர்களுக்கு ஆண்டின் ஆரம்பம் திருமணத்திற்கு ஏற்ற காலமாகும்.
காதல் வாழ்க்கை மற்றும் திருமணமானவர்கள் துணையுடன் அற்புதமான நேரத்தை அனுபவிப்பார்கள். அக்டோபரில் உறவுகளில் கவனமாக இருங்கள். உறவில் நல்லிணக்கத்தை பேண, ஈகோவைத் தவிர்த்து சிறு வாக்கு வாதங்களிலிருந்து விலகி இருங்கள்.