இந்த பரிகாரத்தை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தன்று செய்ய வேண்டும். ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம் எத்தனையோ தானங்களை நம் கையால் வாங்கி செய்திருப்போம்.
அன்னதானம் கூட செய்திருப்போம். ஆனால், இந்த தானத்தை செய்திருக்க மாட்டோம். அப்படி என்ன ஒரு பெரிய தானம். இந்த தானத்தை கொடுத்தால் 21 தலைமுறை பாவமும் கழியும்.
21 தேங்காய் வாங்கி தானம் கொடுங்கள். மட்டை தேங்காய் கிடையாது. சாதாரண தேங்காய் தான். 21 தேங்காய்களை வாங்கி உங்கள் கையால் அடுத்தவர்களுக்கு நீங்கள் தானம் கொடுக்க வேண்டும். கோவில் வாசலில் இருப்பவர்கள் அல்லது கஷ்டப்படுபவர்கள் என்று யாருக்காவது இந்த 21 தேங்காயை உங்கள் கைகளால் தானம் கொடுங்கள். மொத்தமாக வாங்கி ஒரு இடத்தில் கொடுத்து விடக் கூடாது.
ஒவ்வொரு தேங்காயாக 21 நபருக்கு, தேங்காய் தானம் கொடுத்தால், 21 தலைமுறை பாவமும் கழியும் என்று சொல்லப்பட்டுள்ளது. (ஒரு தேங்காயை ஒருவருக்கு என்ற வீதம், 21 பேருக்கு 21 தேங்காய்.
கொஞ்சம் தயங்காமல் சிரமப்பட்டு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இதற்காக ஆக கூடிய செலவு கூட மிகவும் குறைவுதான்.
ஒவ்வொரு தேங்காய் தானம் கொடுக்கும் போதும், ஒவ்வொரு தலைமுறைபாவமும் கழிந்து கொண்டே வரும். பிறகு உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் படிப்படியாக தீரும்.
குறிப்பாக வருமானத்திற்கு தடை போடும் பிரச்சனைகளை சரி செய்ய இந்த பரிகாரம் உதவியாக இருக்கும். நீங்கள் நினைத்த காரியம் கைவிடும்.