Breaking News :

Saturday, May 03
.

ஏழு தலைமுறை பாவங்களை போக்கும் பச்சரிசி?


ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் என அனைத்தும் தீருவதற்கு

சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அதை எறும்பு தூக்கிச் செல்லும். 

அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். 

 

அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக் காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். 

எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும். 

 

இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு அவை இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும்.

 

இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். 

 

இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்து போய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப் போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பேர்  சாப்பிட்டதற்குச் சமம். இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது .

 

(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச்சனி முதலிய எல்லா சனிதோஷமும் இதில் அடங்கும்..)

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.