தனுசு ராசி நண்பர்களே இந்த 2025ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை காண்போம் பொதுவாகவே தனுசு ராசிக்காரர்கள் எவ்வளவு பெரிய தோழிகள் வந்தாலும் சலிக்காமல் போராடுபவர்கள் கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏமாற்றங்கள் அவர்களுக்கு புதிதல்ல எதையும் சமாளிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு தனகாரகன் குருவின் ராசியில் இவர்கள் பிறந்திருப்பதால் பணத்தின் பின்னால் ஓட மாட்டார்கள் ஏனென்றால் இவர்களுக்கு பணத்தைவிட மானம்தான் வீரராக இருக்கும் சிறுவயதில் எதிர்பாராத கண்டங்கள் ஏற்பட்டாலும் பூரண ஆயுளுடன் பெரும்பாலும் வாழ்வார்கள் எல்லோருக்கும் மரியாதை கொடுப்பார்கள் அனைவரிடம் ஆத்மார்த்தமாக பழகும் சுபாவம் கொண்டவர்கள் பல சாதனைகள் செய்யக்கூடியவர்கள் தற்பெருமை அதிகம் உடையவர்கள் எதிர்காலத்தில் நடக்கப் போவதை முன்கூடிய அறிந்து கொள்ளும் ஆற்றில் கொண்டவர்கள் சுயநலம் பாராமல் எதையும் துணிந்து செய்வார்கள்.
வரும் மார்ச் மாதம் வரை சனிபகவான் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்குவார் புதிய தொழில் மூலமாக நல்ல வருமானத்தை பெறுவீர்கள் அசையும் அசையா சொத்து சேர்க்கை உண்டாகும் தொழில் போட்டிகள் குறையும்.
29-3-2025 சனி பெயர்ச்சியில் சனிபகவான் ராசிக்கு 4-ம் வீட்டிற்கு செல்கிறார் புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரப்பதிவுகளில் கவனத்தை செலுத்துங்கள் தாயாரின் உடல் நலத்துக்கும் சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும் தாயாரிடத்தில் வீண் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டு உடல் நலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள் ஓய்வு கிடைக்கும் நேரத்தில் ஓய்வு எடுங்கள் வேலையில் பணிச்சுமை அதிகமாக காணப்படும் கவனம்.
கடந்த ஒரு வருட காலமாக குரு பகவான் ஆறாம் இடத்தில் சஞ்சரித்து பெரிய நற்பலன்களை வழங்கவில்லை என்றாலும் வரக்கூடிய 10-05-2024 அன்று குரு பெயர்ச்சிகள் குருபகவான் ராசிக்கு ஏழாம் இடத்திற்கு செல்கிறார் ஏழாமிடம் என்பது குருபகவானுக்கு மங்களகரமான இடமாக கருதப்படுகிறது. பொதுவாகவே குருபகவான் 2.5.7.9.11-ம் இடங்கள் குரு பலன் தரக்கூடிய இடங்கள் ஆகும் 7ம் இடம் என்பது களத்திர ஸ்தானம் ஆகும் தடைபட்ட திருமணங்கள் தடை இன்றி நடக்கும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் தடையின்றி புத்திர பாக்கியம் கிடைக்கும் தன சேமிப்புகள் உண்டாகும் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பகை விலகும் கருத்து மோதல்கள் குறையும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் குடும்ப உறவுமுறைக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் அகலும் விட்டு சென்ற சொந்தம் தேடி வருவார்கள் நண்பர்கள் துணை இருப்பார்கள் நினைத்தது யாவும் நடக்கும்.
புதிய வாகன யோகமும் சிலருக்கு வீடு கட்டும் அமைப்பும் உள்ளது.
வங்கிக்கடன் உடனடியாக கிடைக்கும். 4-ம் இடத்தில் பலவீனமாக காணப்படும் ராகு பகவான்
18-05-2025 ல் வரக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியில் ராகுபகவான் மூன்றாம் இடமான உபஜெய ஸ்தானத்திற்கு பின்னோக்கி வருகிறார் இதனால் திடீர் பணவரவுகள் கிடைக்கும்.
இன்ஷூரன்ஸ் ஓய்வூதிய பணங்கள் பிஎஃப் பண்டு போன்ற முதிர்வு பணங்கள் கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும் நினைத்த காரியம் யாவும் கைகூடும் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் அன்னிய மொழிக்கார்களின் உதவிகள் கிடைக்கும் சிறு பெரும் தொழில் நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு நிரந்தர வேலை ஆட்கள் கிடைப்பார்கள் தொழில் தொய்வின்றி நடக்கும் லாபகரமாக அமையும்.
பங்குசந்தை ஸ்டாக் மார்கெட். ட்ரேடிங் ஏறுமுகம் காணப்படும்.
ராசிக்குள் 10-ம் இடத்தில் இருந்து நன்மைகளை வழங்கிக் கொண்டிருந்த கேது பகவான் வரும் ராகு+ கேது பெயர்ச்சிகள் 9-ம் இடத்திற்கு பின்னோக்கி செல்கிறார் கேது 9-ம் இடத்தில் அமர்வது பெரிய சிறப்பில்லை பூர்விக சொத்து பிரச்சினை உண்டாகும் சகோதரர்கள் தேவையற்ற மனஸ்தாபங்கள் உண்டாகும் தந்தையிடம் கருத்து மோதல்கள் உருவாகும் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் கோயில் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
பெண்களுக்கு!
வரக்கூடிய குரு பெயர்ச்சி பெரிய மாற்றத்தை உண்டு பண்ணும் ஆடை அணிகலன்கள் ஆபரண சேர்க்கை உண்டாகும் கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும் குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். தன்நம்பிக்கையும் தைரியமும் பிறக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு!
வேலையில் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் பெறுவீர்கள் பதவி உயர்வும் சமாபள உயர்வும் கிடைக்கும். விருப்பட்ட ஊர்களுக்கு பணியிடை மாற்றம் உண்டாகும் குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைக்கும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேறாறம் காணப்படும்.
மாணவர்களுக்கு!
கல்வி அறிவு மேம்படும் ஞாபக சக்தி அதிகமாக காணப்படும் தேர்வுகளில் டாப் ரேங்க் வாங்க முடியும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமைகளில் நவகிரக குரு பகவான் வழிபாடும் ஞானம் தரும் தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்யுங்கள் பசுமாடுகளுக்கு கால்நடைகளுக்கு தீவனம் தாருங்கள் மற்றும் இயலாதவர்கள் உணவு வழங்குங்கள் நல்லதே நடக்கும்.