Breaking News :

Saturday, December 21
.

துலாம் - ஆங்கில புத்தாண்டு 2025 ராசி பலன்கள் பரிகாரங்கள்


இந்த வருடம் சனி பெயர்ச்சி ராகு+ கேது பெயர்ச்சி குரு பெயர்ச்சி உங்கள் ராசிக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரும் அதிர்ஷ்டம் பெறக்கூடிய ராசிகளில் துலாம் ராசியும் ஒன்று இந்த 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

 துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையை ரசித்து மகிழ்வாக வாழக்கூடியவர்கள் துலாம் ராசியில் பிறந்தவர்கள் நேர்மையாக இருக்கவே விரும்புவர்கள் இவர்களைப் போலவே மற்றவர்களும் நீதி நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் கொள்வார்கள் தராசு எவ்வளவு சிறிதாக இருந்தாலும் எவ்வளவு துல்லியமாக எடை போட உதவுகிறதோ அதுபோலத்தான் மற்றவர்களை எடை போட்டு வைத்திருப்பார்கள் வசீகர தோற்றம் உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள் துலாம் ராசிக்காரர்கள்.

மார்ச் மாதம் 29 ஆம் தேதி வரை சனிபகவான் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பல தொல்லைகளை தந்து கொண்டும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக சனி பகவானால் நற்பலன்களை தர முடியவில்லை இந்த சனி பெயர்ச்சியானது ராசிக்கு 6-ம் இடமான உபஜெய ஸ்தானத்துக்கு வருவதால் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் உடல் நல குறைபாடுகள் நீங்கும் மருத்துவ செலவுகள் கட்டுக்குள் வரும் கூட்டுத் தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் மன மகிழ்ச்சி காணப்படும் சொத்து பிரச்சனைகள் தீரும் உங்கள் மீது இருந்த பழிச்சுமைகள் நீங்கி குற்றமற்றவர் என்று நிரூபணம் ஆகும் .
இரும்பு சார்ந்த தொழில் வியாபாரங்கள் நல்ல லாபத்தை தரும்.


குருபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தாலும் 10- 05-2025 அன்று நடைபெறக்கூடிய குரு பெயர்ச்சி ஆனது 9-ம் இடமான பாக்ய ஸ்தானத்திற்கு வருகிறார் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் தடைபட்ட திருமணங்கள் தடையின்றி நடக்கும் கடன் சுமைகள் குறையும் தொழில் வியாபாரங்கள் செழிபடையும் நல்ல லாபத்தை தரும் புதிய தொழில்கள் மூலமாக வருமானம் பன்மடங்கு உயரம் கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும்
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.

பண சேமிப்புகள் ஆபரண சேர்க்கைகள் உண்டாகும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும் தந்தை மகன்ககுள் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலம் சகோதரர்களுக்குள் நல்லிணக்கம் ஏற்படும் புதிய முயற்சிகளில் வெற்றியை தேடி தரும்.

மே மாதம் வரை ராகு பகவான் ராசிக்கு ஆறாம் இடத்தில் இருந்து நன்மைகளை  வழங்குவார் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் வெளிநாடு வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை எளிதில் கிடைக்கும் பங்குச்சந்தைகள் உயர்வை தரும் நிகர லாபத்தை பெறலாம்.

18-05-2025 ஆம் ஆண்டு வரக்கூடிய ராகு +கேது பெயர்ச்சியில் ராகு பகவான் 6-ம் இடத்திலிருந்து 5-ம் இடத்துக்கு பின்னோக்கி வருகிறார் இதனால் தேவையற்ற மனக்சப்புகளும் மன ஸ்தாபங்களும் உருவாகும் புத்திர வழியில் விரையங்கள் உண்டாகும் தேவையில்லாத பிரச்சனைகள் சிக்கிக் கொள்ளாதீர்கள் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம் உணவு விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்கவும்.

மே மாதம் வரை கேது பகவான் ராசிக்கு 12 ஆம் இடத்தில் அமர்ந்து இருந்தாலும் ராகு+ கேது பெயர்ச்சியில் 11-ம் இடத்திற்கு செல்கிறார் 11ஆம் இடம் என்பது லாப ஸ்தானமாக கருதப்படுவதால் கேதுவால் பல நன்மைகள் நடக்கும் வெளிநாடு தொடர்புடைய தொழில்கள் லாபத்தை தரும் சித்த மருத்துவம் ஜோதிடம் சட்டத்துறை கயிறு வியாபாரம் பவர்லூம் கைத்தறி கைவினைப் பொருட்கள் வர்மக்கலை மீன்பிடி வலை தயாரித்தல் கேபிள்.டீவி கம்யூடடர் சர்வீஸ் போன்ற தொழில்கள் லாபத்தை தரும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

பெண்களுக்கு!

குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும் சந்தோஷமாக காணப்படுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு!

மேல் அதிகாரிகாரிகள் உதவி செய்வார்கள் நினைத்த ஊருக்கு பணியிடை மாற்றத்துக்கு முயற்ச்சி செய்யலாம் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்ப்படும் வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும்.

மாணவர்களுக்கு!
இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்
விருப்ப பாட பிரிவுகள் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும்.
நீட் போன்ற மருத்துவ தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வாருங்கள் பௌர்ணமி திதியன்று
மாலை சந்திர உதய நேரத்தில் வீட்டில் மஹாட்சுமி வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.