எலுமிச்சை பழத்தை வைத்து, நாம் செய்யும் எந்த பரிகாரமாக இருந்தாலும், அதிலிருந்து நம்மால் முழுமையான பலனை பெற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. கெட்ட சக்தியை இழுத்து வெளியே தள்ளுவதில் , எலுமிச்சம் பழத்திற்கு அதிக சக்தி உள்ளது என்றே கூறலாம்.
இந்த எலுமிச்சை பழத்தை வைத்து, எந்தெந்த பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம். சில பேர் வீட்டில் சுபகாரியங்கள் தள்ளிக் கொண்டே போகும். தேதி முடிவு செய்வார்கள். ஆனால், அந்த தேதியில் சுபநிகழ்ச்சி நடத்த முடியாது. அப்படி இருக்கும் பட்சத்தில், வெள்ளிக்கிழமை அன்று ஒரு எலுமிச்சை பழத்தை, இரண்டு பாகங்களாக பிரித்து, பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டு விடக் கூடாது.
இரண்டு பாகங்களாக வைத்திருக்கும் எலுமிச்சை பழத்தில், ஒரு பக்கம் மஞ்சளையும், ஒரு பக்கம் குங்குமத்தையும் தடவி உங்கள் வீட்டு வாசற்படிக்கு வெளிப்பக்கத்தில் வைத்து, அதன் பக்கத்தில் ஒரு மண் அகல் தீபம், நல்லெண்ணை ஊற்றி ஏற்ற வேண்டும். வெள்ளிக்கிழமை காலை இந்த முறைப்படி எலுமிச்சை பழத்தை வைத்து, அகல் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அப்படியே விட்டு விடுங்கள்.
சனிக்கிழமை காலை அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து, மரத்தடியில் கால் படாத இடத்தில் தூக்கி போட்டு விடுங்கள். வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமை தினத்தில் இப்படி செய்யும் பட்சத்தில் உங்களுடைய வீட்டில் சுப காரிய தடை நீங்கும்.
சில பேர் தொழில் செய்யும் இடத்தில் வியாபாரம், கண்திருஷ்டி காரணமாக, மந்தமாக செல்ல ஆரம்பிக்கும். இப்படிப்பட்டவர்கள் எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதன், இரண்டு பக்கங்களிலும் குங்குமத்தை வைத்து, கடையின் வாசல் படியில் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு துண்டை வைத்து விடவேண்டும்.
இதை எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். மறுநாள் காலை அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து உங்கள் கடையை சுற்றி தூர தூக்கி போட்டு விடுங்கள். இறுதியாக அமாவாசை அன்று செய்யப்போகும் பரிகாரம்.
இதற்குத் தேவை இரண்டு எலுமிச்சை பழங்கள். இரண்டு எலுமிச்சை பழங்களையும் இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். இப்போது மொத்தம் நான்கு துண்டுகள் நம் கையில் இருக்கும்.
அதில் இரண்டு துண்டில் மஞ்சளும், இரண்டு துண்டில் குங்குமமும் தடவிக்கொள்ள வேண்டும். அமாவாசை அன்று, காலை நேரத்திலேயே இப்பபடி செய்து வைத்துவிட்டு, அமாவாசை முடிந்த மறுநாள் காலை எழுந்து, அந்தப் பழத்தை எடுத்து உங்கள் வீட்டை சுற்றி, நசுக்கி தூர போட்டு விட்டாலே போதும். உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி, அந்த எலுமிச்சை பழத்தோடு சென்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.