செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கீழ்காணும் பரிகாரங்கள் செய்து கொள்ளுங்கள்.
செவ்வாயால் ஏற்படும் தீமைகள் குறைந்து கண்டிப்பாக நன்மைகள் அதிகரிக்கும்.
1. வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். அல்லது அறுவை சிகிச்சைக்கு ரத்தம் பாட்டில் வாங்கி கொடுங்கள்.
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு வாங்கி கொடுங்கள். (ராணுவம், காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. வெட்டி வேர் அதிகம் உபயோகியுங்கள்.
9. செம்ப்பருத்தி செடி வீட்டில் வளருங்கள்.
10 . சிகப்பு நிறம் அதிகம் உபயோகியுங்கள்.
11. சகோதர வர்கத்துக்கு மாதுளை பழம் வாங்கி கொடுங்கள்.
12. புதியதாக வீடு கட்டுபவர்களுக்கு ஒன்பது செங்கல் வாங்கி தானமாக கொடுங்கள்.
13. மண் சட்டியில் உணவு உண்ண பழகுங்கள்..