தச ஹர என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், அதாவது அனைவருக்கும் உள்ள 10 கெட்ட குணங்களை நீக்குகிறது.
1) அஹங்காரம் (ஈகோ)
2) அமானவ்தம் (கொடுமை)
3) அன்யாயம் (அநீதி)
4) காம வசனம் (காமம்)
5) க்ரோதம் (கோபம்)
6) லோபம் (பேராசை)
7) மடம் (பெருமை)
மட்சரம் (பொறாமை)
9) மோஹம் (இணைப்பு)
10) ஸ்வர்தம் (சுயநலம்)
இந்த 10 தீய குணங்களுக்கு மேல்
" விஜயா” (வெற்றி) என்பதைக் குறிக்கும்
" விஜயதசமி " என்றும் அழைக்கப்படுகிறது.
நாம் அனைவரும் இந்த எதிர்மறைகளில் இருந்து விடுபட்டு, வழக்கமான கோஷங்கள் மூலம் நமது உண்மையான சுயத்தை உணர்ந்து, ஆதி சக்தியின் தாமரை பாதங்களில் சரணடைவோமாக!
தேவி மகாசரஸ்வதி, சுமங்கலி என அழைக்கப்படுகிறாள். இந்த அன்னைக்கு தாழம்பூ சூடி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்ய வேண்டும். எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்து வழிபடலாம்.
லக்ஷ்மி எல்லோருக்கும் வருவாள் ஆனால் போய் விடுவாள்,
சரஸ்வதி வரமாட்டாள் வந்தால் போகமாட்டாள்.
சரஸ்வதி வரவேண்டுமானால் ஏழு ஜன்ம புன்னியம் செய்திருக்க வேண்டும்.
வெண் தாமரை மலரில் குடி இருப்பவள். அன்ன வாகனம் கொண்டிருப்பவள். முனிவர்களால் வணங்கப்படும் ஞான தேவி இவள். அமைதியே வடிவானவள். பாற்கடலில் தோன்றி நான்முகனின் சிருஷ்டிக்கு ஆதாரமாக நின்றவள். வீணையை ஏந்தி ஓங்கார நாதம் எழுப்புபவள். வேத ரூபிணி, நாத சொரூபிணி என்றெல்லாம் போற்றப்படும் ஞான மழை முகிலாக இந்த அன்னை விளங்குகிறாள்.
பேச்சின் ஆதாரமாக, கலைகளின் வித்தாக இருப்பவளும் இவள்தான். பிரம்மலோகத்தில், ஞான பீடத்தில் அமர்ந்து வேத கோஷங்களை, சங்கீத நாதங்களைக் கேட்டு மகிழ்பவள். சாரதா, த்ரைலோக்ய மோஹனா, காமேஸ்வரி என பலரூபம் கொண்டவள். நகுலி, ருத்ர வாகீஸ்வரி, பரா சரஸ்வதி, பால சரஸ்வதி, தாரண சரஸ்வதி, நித்யா சரஸ்வதி, வாக்வாதினி, வஷினி, மோதினி, விமலா, ஜபினி, சர்துஸ்வரி என்றெல்லாம் சரஸ்வதியை மந்திர சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.