இந்த பிப்ரவரி மாதம் அஷ்டம ஸ்தானமான 8-ம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்து நற்பலன்களை வாரி வழங்குவார் இதனால் கணவன் மனைவி உறவு பலப்படும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள் குடும்பத்தில் இருந்து வந்த மனஸ்தாபங்கள் அகலும் உறவினர்களால் நற்செய்தியும் கிடைக்கும் தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
11-ம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் எடுத்த காரியம் யாவும் வெற்றியை தேடி தரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் துணிச்சலாக எதையும் செய்து முடிப்பீர்கள் தொழில் போட்டிகள் குறையும்.
பிப்ரவரி 11ம் தேதிவரை புதனும்
பிப்ரவரி 12ம் தேதிவரை சூரியனும்
6ம் இடத்தில் அமர்ந்து
நற்பலன்களை வழங்குவார்கள்
பிறகு 7ம் இடத்தில் பலவீன படுகிறார்கள் ஞாபக மறதி அதிகமாக காணப்படும்
பண இழப்புகளும் உண்டாகும் பங்குச்சந்தை முதலீடுகளில் கவனம் தேவை.தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம்.
10-ம் இடத்தில் குரு சஞ்சரிப்பதால் தொழில்களுக்காக புதிய முதலீடுகள் எதையும் போட வேண்டாம் ஆடம்பர செலவுகளை தவிர்கவும்.
7-ம் இடத்தில் சனிபகவான் சஞ்சாரம் குடும்பத்தில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும் நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் பண விவகாரங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
8-ல் ராகுவும் 2-ம் வீட்டில் கேதுவும் இருப்பதால் மருத்துவ விரைய செலவுகள் கூடும் உடல்நலனில் கவனம் செலுத்துங்கள் வேலையில் திருப்தி இருக்காது.
அலைச்சல் அதிகமாக காணப்படும் வெளியூர் பயணங்களால் உடல் சோர்வு உண்டாகும் உணவு கட்டுப்பாடு மிக அவசியம்.
பிப்ரவரி 2,3, சந்திராஷ்டமம்
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் சிவாலயத்தில் உள்ள நவகிரக சூரியன் வழிபாடும் சண்டிகேஸ்வரர் வழிபாடும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.