Breaking News :

Friday, October 25
.

கடவுள் கனவில் வந்தால் என்ன பலன்?


கனவில் கோவிலை கண்டால் அந்த இறைவனின் அருளால் விரைவில் நினைத்த விஷயங்கள் நடந்து முடியும்.

கோவிலுக்குள் செல்ல முடியாமல் கூட்டத்தில் மாட்டிக் கொள்வது போல் கனவு வருமேயானால், சில எதிர்பார்க்காத பிரச்சனையில் சிக்கிக்கொண்டு கஷ்டபடுவீர்கள் என்று அர்த்தம்.

ஆலயத்தில் நாம் மட்டும் தனியாக இருந்து கோவில் கதவுகள் சாத்தப்பட்டது போல் கனவு வந்தால் நாம் செய்து வரும் தொழிலில் பிரச்சனை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

கோவிலின் வாசலை திறந்து உள்ளே செல்வது போல் கனவு வந்தால் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

கனவில் கடவுளுக்கு மாலை அணிவிப்பது போல கனவு வந்தால் நல்ல வளர்ச்சியை அடைய போகிறீர்கள் என்று அர்த்தம்.

எந்த கடவுளை கனவில் கண்டாலும் பிரச்சனைகள் விலகும். எல்லோரையும் வெற்றி கொள்ளும் சக்தி உங்களுக்கு கிடைக்கும்.

ஒரு கோவில் கோபுரத்தை கனவில் கண்டால், வாழ்க்கையில் முன்னேற போகிறீர்கள் என்று அர்த்தம். மேலும் உங்களின் பாவங்கள் நீங்கி விட்டது என்றும் பொருள்.

கோவிலில் வழங்கப்படும் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல் கனவு வந்தால் சிலரால் மனகவலைகள் ஏற்படும் என்று பொருள்.

கோவில் தெப்பத்தை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறு ம்.

கடவுளிடம் பேசுவது போல் கனவு காண்பது மிகவும் நல்லது, இது விரைவில் நன்மை பெற போவதன் அறிகுறியாகும்.

விஷ்ணுவை எந்த கோலத்தில் கனவில் கண்டாலும் செல்வ செழிப்பு ஏற்படும்.

விஷ்ணு கருடன் மீது வருவது போல கனவு கண்டால் வழக்குகள் சாதகமாக முடியும்.

காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் ஏற்படும்.

கடவுள் விக்கிரகத்தை கனவில் கண்டால் அந்த கடவுளை தரிசனம் செய்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.

கோவில் மணியை கனவில் கண்டால் நினைத்த காரியம் வெற்றியுடன் முடியும்.

கோவில் மணி அடிப்பது போல கனவு கண்டால் பொருள் வரவு உண்டு.

கோவில் மணி அறுந்து விழுவது போல கனவு கண்டால் செய்யும் காரியங்கள் இடையூறுகள் ஏற்படும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.