ரொம்ப நாட்களாக திருமணத்திற்கு பெண் பாத்துக் கொண்டிருக்கிறீர்கள் இல்லை மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுக்கு சரியான ஒரு பெண்ணோ அல்லது மாப்பிள்ளையோ கிடைக்கவில்லை என்றால் இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள் திருமணமாகாத ஆண் அல்லது பெண் இவர்களுக்கு ஐந்தே வாரத்தில் திருமணம் நிச்சயம் ஆகும். உங்கள் வீட்டில் கெட்டி மேள சப்தம் கேட்பது உறுதி. இந்த பரிகாரத்தை ஆண்கள் எப்படி செய்ய வேண்டும், பெண்கள் எப்படி செய்ய வேண்டும்.
நிறைய பெண்களுக்கு ஜாதகத்தில் தோஷம் காரணமாக திருமணம் நடக்காமல் இருக்கும். சில பெண்களுக்கு காரணமே தெரியாமல் திருமணம் நடக்காமல் இருக்கும். ஒரு சிலருக்கு பணம் இல்லை என்பதால் திருமணம் நடக்காமல் இருக்கும். சில பெண்களுக்கு சரியான மாப்பிளை கிடைக்காமல் இருக்கும் இதுபோல் உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எந்த காரணத்தினாலும் திருமணம் நடக்காமல் இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அம்பாள் மேல் பாரத்தை போட்டுவிட்டு இந்த பரிகாரத்தை ஒரு ஐந்து வாரம் மட்டும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கஞ வீட்டில் கெட்டி மேளம் சத்தம் கேட்கும். உங்கள் வீட்டில் திருமணம் ஆகாத ஆண்கள் இருந்தால் கூட பரவாயில்லை அவர்களுக்கும் ஒரு பரிகாரம் இருக்கிறது.
நம்பிக்கை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை செய்து திருமண தடை இருந்தால் அதை நீக்கி மிக விரைவில் திருமணம் நடப்பதற்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
முதலில் திருமணம் ஆகாத பெண்களுக்கு திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரத்தை தெரிந்து கொள்வோம்.
திருமணம் ஆகாத பெண்கள் வியாழக்கிழமை அன்று மருதாணியை செடியில் இருந்து பறித்து வர வேண்டும். இது உங்கள் வீட்டில் தான் மருதாணி செடி இருக்கணும் என்று அவசியம் இல்லை.
பக்கத்து வீட்டில் இருந்தாலும் அந்த செடியில் இருந்து கூட நீங்கள் மருதாணி பறித்து வரலாம். ஒரு சுத்தமான செம்பில் நல்ல தண்ணீர் எடுத்துக்கொண்டு இந்த மருதாணி இலைகளை உருவி அந்த தண்ணீரில் போட்டு வைத்து. அதாவது வியாழக்கிழமை இரவில் இந்த சொம்பு தண்ணீரை தயார் செய்து உங்க பூஜை அறையில் வைக்க வேண்டும். இந்த சொம்பு தண்ணீரை யார் தயார் செய்யனும் என்றால் திருமணம் ஆகாத பெண் தயார் செய்ய வேண்டும்.
இல்லை என்றால் திருமணம் ஆகாத பெண்ணின் தாய் இதை செய்யலாம் தவறு கிடையாது. மறுநாள் வெள்ளிக்கிழமை அன்றைக்கு உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மன் கோவிலுக்கு போக வேண்டும். போகும்போது திருமணம் ஆகாத பெண்ணையும் நீங்கள் கட்டாயம் கூட்டிக்கொண்டு தான் போக வேண்டும். இந்த பரிகாரத்தை திருமணம் ஆகாத பெண் தான் செய்ய வேண்டும். மறக்காமல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் மருதாணி இலை தண்ணீரையும் எடுத்து போக வேண்டும்.
எல்லா கோவில்களிலும் காலையில் அம்மனுக்கு அபிஷேகம் நடக்கும் அப்பொழுது குருக்களிடம் திருமணம் ஆகாத பெண்ணின் கையால் மருதாணி இலை சொம்பு தண்ணீரை கொடுத்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்ய சொல்லுங்கள். குருக்கள் அந்த தண்ணீரை வாங்கி போய் அபிஷேகத்தின் போது அம்மனுக்கு ஊற்றி விடுவார்கள். இப்படி வாரம் தோறும் ஐந்து வெள்ளிக்கிழமை இந்த மருதாணி கலந்த தண்ணீரில் திருமணம் ஆகாத பெண்ணின் கையால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் போது திருமணம் ஆகாத பெண்ணுக்கு ஐந்தே வாரத்தில் திருமணம் பேசி முடிப்பதற்கான நிறைய வாய்ப்புகள் உருவாகும்.
இந்த பரிகாரம் செய்வதற்கு உங்கள் ஊர் கோயிலில் நீங்கள் கொடுக்கும் தண்ணீரில் அம்மனுக்கு அபிஷேகம் பண்ண முடியாது என்று சொன்னால் என்ன செய்வது. நிஜமாகவே கொஞ்சம் பெரிய கோயிலில் செய்ய மாட்டார்கள். சின்ன கோவிலில் எல்லாம் செய்வார்கள்.
பெரிய கோவிலில் செய்ய முடியவில்லை என்றாலும் உங்கள் ஊரில் வந்து பண்ண முடியாத வாய்ப்புகள் இருந்தாலும் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி ஒவ்வொரு அகல் விளக்கிலும் இரண்டு இரண்டு மருதாணி இலையை போட்டு திரி போட்டு தீபம் ஏற்றி அம்பாளுக்கு முன் வைத்துவிட்டு மனதார திருமணம் நடக்க வேண்டும் என்று திருமணம் ஆகாத பெண் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இந்த தீபத்தை திருமணம் ஆகாத அந்த குறிப்பிட்ட பெண்ணோட கையால் தான் ஏற்ற வேண்டும் என்பது முக்கியமான விஷயம். வேறு யார் ஏற்றினாலும் பலன் கிடைக்காது. திருமணம் ஆகாமல் திருமணம் தள்ளிக் கொண்டு செல்லும் அந்த குறிப்பிட்ட பெண் தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.
இப்படி தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு செய்து வந்தால் கண்டிப்பாக மாப்பிளை அமையும். உங்கள் வீட்டில் கெட்டி மேளம் சத்தம் கேட்கும்.
திருமணம் ஆகாத ஆண்கள் என்ன செய்வது.
திருமணம் ஆகாத ஆண்கள் பிள்ளையார் கோவிலுக்கு செல்ல வேண்டும். பெண்கள் அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
திருமணம் ஆகாத ஆண்கள் விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கே இரண்டு மண் அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அந்த இரண்டு விளக்கைகளிலும் இரண்டு மருதாணி இலையை போட்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
ஐந்து வாரங்கள் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அல்லது புதன்கிழமையில் ஆண்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து 5 வாரங்கள் செய்து வந்தால் திருமண யோகம் கூடிவரும். கண்டிப்பாக நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் மிக விரைவில் உங்கள் வீட்டில் மாப்பிள்ளைக்கோ அல்லது பொண்ணுக்கோ வரன் அமைந்து உங்கள் வீட்டில் கெட்டிமேளம் சத்தம் கேட்கும் என்பது உறுதி.
குறிப்பு: இந்த பரிகாரம் செய்யும் கிழமைகளில் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.