Breaking News :

Monday, August 11
.

கற்பூரம் அணைந்தால் அபசகுணமா?


நம்மில் பலருக்கும் பல ஆன்மீக சந்தேகங்கள் இருக்கும். அப்படியாக நம் கோயில்களில் வீடுகளில்தீப ஆராதனையின் போது கற்பூரம் அணைந்தால் என்ன செய்வது என்று தெரியாது.

மேலும் கற்பூரம் அணைந்தால் அது அபசகுணம் என்று கருதுவது உண்டு. ஆனால் உண்மையில் கற்பூரம் அணைத்தால் அபசகுணம் இல்லை.

அப்படி அணையும் பொழுது அந்த கற்பூரம் இல்லாமல் வேறு கற்பூரம் எடுத்து மாற்றி பூஜை செய்வது நல்லது.

மேலும் ஒளியில் எல்லாம் அழகாய் தெரியும். அப்படியாக கோயிலில் கற்பூர வெளிச்சத்தில் இறைவனின் உருவம் இன்னும் அழகாய் தெரியும்.

வீட்டில் கற்பூரம் காட்டும் பொழுது வீட்டில் பூஜை அறையில் மாட்டி இருக்கும் சுவாமி படங்கள் மிக அழகாய் தெரியும்.

அதேபோல் கற்பூரம் எரிந்து முடிந்த உடன் காற்றில் கலந்து மறைந்து விடுகிறது. அந்த கற்பூரம் உணர்த்துவது என்னவென்றால் அறியாமை என்னும் இருள் மறைந்து ஞானம் பெற வேண்டும் என்பது ஆகும்.

மேலும் கருவறையில் இருக்கும் இறைவனின் சிலை கல்லினால் வடிக்கப்பட்டது. பலவித அபிஷேகங்கள் செய்வதால் நாளடைவில் சிலரூபம் அடர் கருமை நிறத்துக்கு மாறிவிடும்.

இறைவனின் அழகை முழுமையாய் கண்டு ரசிக்கவே கற்பூர ஒளி காட்டப்படுகிறது. மேலும் சுவாமி மீது தீபம் காட்டும்போது நமது முழு கவனமும் சுவாமி மேலேயே இருக்கும்.

அந்த நேரத்தில் கடவுளை தரிசனம் செய்யும்போது எல்லோருடைய எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். அப்போது இறையருள் பெறுவது மட்டுமே நமது குறிகோளாக இருக்கும்.

மேலும், இறைவனுடைய சக்தியை இந்த ஒளி வடிவத்திலே நாம் பெற்று கொள்வதாகவே ஐதீகம் இருக்கிறது. கற்பூரம் தன்னை அளித்து கொண்டு ஒளி தருகிறது.

அதே போல் நாமும் வாழ்க்கையில் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அதை ஒலித்து நேர்மறை எண்ணங்கள் கொண்டு வாழ இந்த கற்பூரம் ஒரு சாட்சியாக இருக்கிறது.

ஆதலால் எதுவும் அபசகுணம் இல்லை.ஒவ்வொரு விஷயம் பின்னாளில் ஒவ்வொரு பாடம் இருப்பதை நாம் உணர வேண்டும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.