Breaking News :

Sunday, May 04
.

மனையடி சாஸ்திரம் பாருங்க கண்டிப்பா..


மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் நீள, அகலங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பலவித கருத்துக்கள் நிலவுகின்றது. அறையின் நீள அகலத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று சிலரும் அதனால் பாதிப்பு உண்டு என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

10 X 10 என்ற சதுர அமைப்பில் இருக்கக் கூடிய ஐம்பூதங்களில் (five eliments) விகிதாச்சாரம் (%) 17X10 என்ற நீண்ட சதுர அமைப்பிலும் அவ்வாறே இருக்கும். ஆனால் 10 X 10 என்ற இடத்தில் இருக்கும் ஐம்பூதங்களின் (கொள்ளளவு ) அளவும் 17 X 17 என்ற நீண்ட தூர சதுர அமைப்பில் இருக்கும் கொள்ளளவும் நிச்சயம் மாறுபட்டதாகும்.

எனவே இந்த அடி கணக்குகள் ( நம் முன்னோர்கள் தங்களது வாழ்வில் அனுபவ பூர்வமாக கண்டு எழுதி வைத்தது ) நாம் உபயோகித்துக்கொள்வது தவறு அல்ல! ஆனால் அடிக்கணக்கு எவ்விதம் எடுக்க வேண்டும் என்பதை கீழே அளவுகளில் பார்க்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

அடி அளவு பலன்கள் நன்மை

7 தரித்திரம்.
8 மிகுந்த பாக்கியம் உண்டாகும்.
9 பீடை.
10 ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.
11 புத்திர சம்பத்து நிச்சயம் உண்டு.
12 செல்வம் அழியும்.
13 பகைமை கூடும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 நஷ்டம்,விரயம் சபலம்.
15 மனக்கிலேசம்.
16 மிகுந்த செல்வம் உண்டு.
17 அரசன் போல் வாழ்வு.
18 அனைத்தையும் இழப்பர்.
19 உயிர் நஷ்டம்.
20 இராஜ யோகம் ,இன்பம்.
21 வளர்ச்சி, பால் பாக்கியம் ,பசுவிருநத்தி.
22 எதிரி அஞ்சுவான்.
23 நோய், கலக்கம்.
24 பரவாயில்லை ,நன்மை, தீமை எதுவும் இல்லை.
25 தெய்வம் உதவாது.
26 செல்வம் உண்டு,அமைதி இருக்காது.
27 மிகுந்த செல்வம் உண்டு.
28 தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
29 பால் பாக்கியம் ,செல்வம்.
30 இலட்சுமி கடாட்சம்.
31 நன்மை நிச்சயம் உண்டு.
32 கடவுள் அருள் உண்டு . வாழ்வில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
33 நன்மையுண்டு.
34 குடி பெருகும்.
35 இலட்சுமி கடாட்சம்.
36 மத்திம பலன்.
37 லாபம் உண்டு, இன்பம் உண்டு.
38 கண்டிப்பாக தவிர்க்கவும் ,கெட்ட சக்திகளின் உறைவிடம்.
39 சுகம், இன்பம்.
40 வெறுப்பு.
41 செல்வம் பெருகும், இன்பம் உண்டு.
42 இலட்சுமி குடியிருப்பாள்.
43 சிறப்பில்லை.
44 கண் போகும்.
45 சகல பாக்கியம் உண்டு.
46 குடி பெயரும்.
47 வறுமை.
48 நெருப்பு பாதிப்பு ஏற்படுத்தும்.
49 மூதேவி வாசம்.
50 பால் பாக்கியம்.
51 வியாஜ்யம்.
52 தான்யம் பெருகும்.
53 விரயம், செலவு.
54 லாபம்.
55 உறவினர் விரோதம்.
56 புத்திரகளால் பலன்.
57 மகப் பேறு இல்லை.
58 விரோதம்.
59 மத்திம பலன்கள்.
60 பொருள் விருத்தி.
61 பகை.
62 வறுமை.
63 குடி பெயரும்.
64 சகல சம்பத்தும் உண்டு.
65 பெண்கள் நாசம்.
66 பத்திர பாக்கியம்.
67 பயம்.
68 பொருள் லாபம்.
69 நெருப்பினால் நாசம்.
70 பிறருக்குப் பலன்.
71 யோகம்.
72 பாக்கியம்.
73 குதிரை கட்டி வாழ்வான்.
74 அபிவிருத்தி.
75 சுகம்.
76 புத்திரர் குறைவு.
77 யானை கட்டி வாழ்வான்.
78 பித்திரர் குறைவு.
79 கன்று காளை விருத்தி.
80 இலட்சுமி வாசம் செய்வாள்.
81 இடி விழும்.
82 தோஷம்.
83 மரண பயம்.
84 செளக்கியம்.
85 சீமானாக வாழ்வர்.
86 இம்சை உண்டு.
87 தண்டிகை உண்டு.
88 செளக்கியம்.
89 பலவீடு கட்டுவான்.
90 யோகம் உண்டு.
91 விஸ்வாசம் உண்டு.
92 ஐஸ்வரியம் சேரும்.
93 பல தேசங்கள் சென்று வாழ்வான்.
94 அந்நிய தேசத்தில் இருப்பான்.
95 தனவந்தன்.
96 பரதேசி.
97 கப்பல் வியாபாரம் செய்வான்.
98 பிரதேசங்கள் செல்லும் வாய்ப்பு.
99 இராஜ்யம் ஆள்வான்.
100 சேமத்துடன் வாழ்வான்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் பழமையான பாடல்களின் மூலம் எழுதப்பட்ட மனையடி சாஸ்திரத்தில் இருந்து எடுத்து எழுதப்பட்டதாகும்.

வாசற்படி வைக்க :
உதாரணமாக வீட்டின் நீளம் அகலம் 35*27அடி என்று இருந்தால் எந்த பக்கம் வாசற்படி வைக்கனுமோ அதை 9 பாகமாக பிரிக்கவேண்டும்.

அதன்படி முதல்3அடி சூரியனுக்கும்,இரண்டாவது 3அடி(3To6)சந்திரனுக்கும்,
மூன்றுவது 3அடி(6-9)செவ்வாய்க்கும்,நான்காவது 3அடி(9-12)புதனுக்கும்,ஐந்தாவது 3அடி(12-15)குருவுக்கும்,ஆறாவது 3அடி(15-18)சுக்ரனுக்கும்,ஏழாவது 3அடி(18-21)சனிக்கும்,எட்டாவது 3அடி(21-24)ராகுவிற்கும்,ஒன்பதாவது 3அடி (24-27)கேதுவிற்குமாக 27அடிகளை பிரித்துக் கொள்ளவேண்டும்.இதில் எந்த கிரகத்தின் பகுதிக்குள் தலைவாசற்படி வைக்கலாம் என பார்ப்போம்.

இந்த ஒன்பது கிரகத்தினுடைய பகுதியில்,சூரிய பாகத்தில்(முதல் 3அடி) வாசற்படி வைத்தால்,ஆதாயம் குறைந்து,தாய்க்கும் பிள்ளைக்கும் மனசங்கடம் உண்டாகும்.

சந்திர பாகத்தில் வைத்தால் வளர்ச்சி உண்டாகும்.
செவ்வாய் பாகத்தில் வைத்தால் வம்பு,வழக்கு,கடன் உண்டாகும்,

புதன்,குரு பாகத்தில் வைத்தால் ஆதாயமும்,லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
சுக்ர பாகத்தில் வீடு,மாட்டுதொழுவம் வாசற்படி வைக்கலாம்.
சனி பாகம் வம்பு,வழக்கு,விபத்து உண்டாகும்.

ராகு கேது பகுதியும் மனை கைவிட்டு போகும்படி செய்துவிடும்.
ஆக,இவற்றுள் புதன்,குரு பாகமே வாசற்படி வைக்க உகந்தபாகமாகும்.

அதாவது 9வது அடியிலிருந்து 15வது அடிக்குள் தலைவாசற்படி அருகால் வைக்க வீடு சுபிட்சமாக இருக்கும்.வீட்டில் லட்சுமியும் அமைதியும் நிலவும்.குடும்பம் வளரும்.

அனைவருக்கும் பொருத்தமான அளவு.

4வது பாகம் புதன், 5 வது பாகம் குரு , 6வது பாகம் சுக்கிரன்.உங்கள் மனதுக்கு நிறைவாக எது தேவையோ அதை தேர்வு செய்யலாம்.
வாசற்படிக்கு தேக்கு,வேங்கை மரம் உகந்தது.

தெரு வாசற்படி உயர்ந்தும் உடல்வாசற்படி தாழ்ந்தும் இருக்கக் கூடாது.வாசற்காலுக்கு இடது பக்கம் கதவு வைக்க வேண்டும்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.

News Hub