Breaking News :

Thursday, November 14
.

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு பாதிப்புகள்?


“ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம் ” என்று கூறுகிறார்களே. மூல நட்சத்திரத்தில் பிறக்கும் பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போன்ற உணர்வை இந்தப் பழமொழி ஏற்படுத்துகிறதே? இதன் உண்மையான உள் அர்த்தம்தான் என்ன?

பழமொழி காலப்போக்கில் மருவி புதுமொழியாக மாறியதற்கு நீங்கள் கூறிய பழமொழியே உதாரணம். ஏனென்றால் “ஆனி மூலம் அரசாளும்; பின் மூலம் நிர்மூலம் ” என்பதுதான் உண்மையான பழமொழி.

அதாவது ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு சௌபாக்கியங்கள் கூடி வரும். ஏனென்றால் ஆனி மாதத்தில் சூரியன் மிதுனத்திலும், சந்திரன் தனுசு ராசியிலும் இருக்கும். ஆனி மாதத்தில் மூலம் நட்சத்திரம் பௌர்ணமி நாளாக அமைந்து விடுகிறது.

எனவே அவர்கள் ஏதாவது கலை/வித்தையில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். அதனைக் கொண்டு மற்றவர்களை ஆளுதல் அல்லது மற்றவர்களின் இதயத்தில் இடம் பிடித்தல் போன்றவற்றைப் பெற்றவர்களாக இருப்பர். இங்கே “ஆளுதல்” என்ற வார்த்தையை அரசு பதவி என்று கொள்ளக் கூடாது.

உதாரணமாக கூற வேண்டுமென்றால், ஒரு நடிகர் குறிப்பிட்ட மாநில மக்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்துள்ளார் என்று கூறுக் கேட்டிருக்கிறோம். அது போல் பிறர் மனதில் இடம்பிடிப்பதைத்தான் இந்தப் பழமொழியில் அரசாளுதல் என்று குறிப்பிட்டுள்ளனர். அதனால்தான் ஆனி மூலம் அரசாளும் எனக் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

அடுத்ததாக பின் மூலம் நிர்மூலம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் 4ஆம் பாதத்தில் பிறப்பவர்கள் எதிரிகளை வீழ்த்தக் கூடியவர்களாக இருப்பர். எனவே அதனைப் “பெண் மூலம் நிர்மூலம்” எனக் கூறுவது தவறு.

நிர்மூலமாக்குதல் என்றால் எதிரியை இருந்த சுவடு தெரியாமல் அழித்தல் என்று பொருள் கொள்ளலாம். இந்த சக்தி மூலம் நட்சத்திரம் 4ஆம் பாதத்தில் பிறப்பவர்களுக்கு இருக்கும். அதற்கு காரணம்,  அதனால்தான் எதிரிகளை அழிக்கும் வல்லமை அவர்களுக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. மூலம் நட்சத்திரத்தைப் பொறுத்தவரை ஆண்/பெண் என்ற பேதம் கிடையாது.
மூல நட்சத்திரம் மாமனாருக்கு ஆகாதா?

மூல நட்சத்திரம் கேதுவின் சாரத்தில் அமர்ந்திருப்பதால் அது குருவின் வீடு என்பதாலும் அதிபுத்திசாலி பெண்ணாக இருக்கும் மாமனார் செய்துவரும் தொழில் மற்றும் வீட்டு கணக்கு வழக்குகளை தனது சுமையாக்கி ஏற்று நடக்ககூடிய பெண்ணாக அமையும் இதனால் மாமனாருக்கு ஓய்வு கிடைக்கும் அன்பு ரீதியாக மூலநட்சத்திரம் மாமனாருக்கு ஆகாது என சொல் வழக்கில் வந்துள்ளது.
 
மூல நட்சித்திர பெண்ணால் மாமனாருக்கு உயிர் கண்டம் என்பதெல்லாம் மூட நம்பிகையின் உச்சகட்டமாகும்.
 
மாமனார் உயிர் என்பது அவர் ஜாதக விதியாகும்.
 
இதே போல் ஆயில்யம் நட்சத்திரம் விசாகம் கேட்டை என எந்த நட்சத்திரத்துக்கும் தனிப்பட்ட முறையில் தோஷம் என்பதே இல்லை கிரக நிலைகளும் திசாபுத்திகளுமே வழி நடத்தும் எனபதே நிதர்சனமான உண்மை ஒருவர் ஜாதகம் என்பது ஒருவருக்கே பேசும் ஒரு ஜாதகத்தை வைத்து குடும்பத்துக்கே பலன் சொல்பது என்பதெல்லாம் உண்மைக்கு புறம்பான செயலாகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.