நல்ல ஜாதகத்தை கொண்டவர்களும், வாழ்க்கையில் ஒரு சில நேரங்ங்களில், கஷ்டப் படுவதற்கு என்ன காரணம், என்கிற உண்மையை நீங்கள் தெரிந்து கொண்டால், நிச்சயமாக வியப்பில் மூழ்கி விடுவீர்கள்!
இது கூடவா, ஒரு காரணம் என்ற அளவிற்கு இந்த பதிவு உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும், அந்த காரணம் என்ன? தினம்தோறும் நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய தவறு என்ன?
என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
1)எவர் ஒருவர் தங்களுடைய சொந்த பந்தங்களை மதிக்காமல் அலட்சியமாக மரியாதை குறைவாக நடத்துகிறார்களோ,
அவர்களுக்கு நவகிரகங்களின் ஆசீர்வாதமும், அனுக்கிரஹமும் கட்டாயம் கிடைக்கவே கிடைக்காது.
இப்படியாக சொன்னால்
நீங்கள் நம்புவீர்களா?
நம்ப மாட்டீங்கன்னு தெரியும்!
சாட்சியோடு சொன்னா நம்புறீங்களான்னு பார்ப்போம்
ஒவ்வொரு கிரகத்துக்குரிய சொந்த பந்தம் எது என்பதையும் இந்த பதிவில் பார்த்துவிடலாம்
1) உங்களுடைய அப்பாவை நீங்கள் மரியாதையாக நடத்தவில்லை என்றால், அப்பாவிற்கு கொடுக்க வேண்டிய ஸ்தானத்தை அவருக்கு நீங்கள் கொடுக்கவில்லை என்றால், உங்களுக்கு திருமணம் தள்ளிப்போகும்.
வேலைவாய்ப்பில் பிரச்சனை ஏற்படும். சொந்த தொழில் முன்னேற்றம் ஏற்படாது.
ஏனென்றால், அப்பா ஸ்தானத்தை குறிப்பது சூரியன்.
2) உங்களுடைய அம்மாவை நீங்கள் மதிக்கவில்லை என்றால், அவர்களை மரியாதை குறைவாக நடத்தினால்,
அவர்களை அவமானப்படுத்தி பேசினால், கட்டாயம் உங்களின் அழகு குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் மங்கிப் போகும்.
குழப்பமான வாழ்க்கை வாழத் தொடங்குவீர்கள். மனநிம்மதியே இருக்காது. ஏனென்றால், அம்மா ஸ்தானத்தை குறிப்பது சந்திரபகவான்.
3) நீங்கள் கணவனாக இருந்தால், உங்களுடைய மனைவியை மரியாதையோடு தான்
நடத்த வேண்டும். மனைவிக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றால்,உங்கள் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக இல்லை.
வீடு, மனை, வாகனம், சொத்து,பத்து சந்தோஷமான வாழ்க்கை, எல்லாவற்றையும் நீங்கள் பெற வேண்டுமென்றால், மனைவிக்கு மரியாதை கொடுக்கவேண்டும். ஏனென்றால் மனைவி ஸ்தானத்தை குறிப்பது சுக்கிரன்.
4) நீங்கள் மனைவியாக இருந்தால் உங்களுடைய கணவருக்கு கட்டாயம் மரியாதை கொடுக்கவேண்டும்.
உங்கள் வீட்டில் நிம்மதியான சூழ்நிலை நிலவ, சந்தோஷம் நிலைத்திருக்க