Breaking News :

Saturday, May 03
.

கனவில் பாம்பு கொத்திவிட்டால் என்னாகும்?


நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது. பெரும்பாலும் நற்பலன் தரும் கனவுகள் தான் அதிகம்.

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவினைக் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். விவசாயிகள் உழுவதைப் போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். திருமணமாகாதோர் பாம்பு கொத்தியதை போல் கனவு கண்டால், விரைவில் திருமணம் நடைபெறும். திருமணமானவர்க்கு செல்வம் வந்து சேரும்.

ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவுக் கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். தெய்வங்களைக் கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். இறந்தவருடன் பேசுவதைப் போல் கனவுக் கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கிடைக்கும்.

திருமணக் கோலத்தைக் கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் விலகி நன்மை பிறக்கும். கர்ப்பிணியைக் கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நன்மை அதிகரிக்கும். ஆமை, தவளை, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களை கண்டால் கவலைகள் பறந்து போவந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். உயரத்தில் இருந்து விழுவது போல் கனவுக் கண்டால் பணம், பாராட்டு குவியும். நிம்மதி பிறக்கும்.

மயில், வானம்பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையெ நெருக்கம் அதிகரிக்கும். கழுதை, குதிரைகளைக் கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக அமையும். மாமிசம் உண்பதைப் போல் கனவுக் கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும். வாத்து, குயிலைக் கனவில் கண்டால் நம் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மலத்தை மிதிப்பது போல் கனவுக் கண்டால் சுபச் செலவுகள் ஏற்படும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.