ஓரைகளில் சுப ஒரைகள், அசுப ஓரைகள் என்று எதுவும் கூற இயலாது.
செய்யப்படும் காரியங்களுக்கு ஏற்ப நாம் ஒரைகளை தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
இலக்கினத்தின் அடிப்படையில் சுப ஓரைகள் மற்றும் அசுப ஓரைகள் அமையும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பெண் குழந்தை பிறந்தால் தாய் மாமனுக்கு கெடுதலா? பரிகாரம் உண்டா?
ரோகிணி நட்சத்திரத்தில் ஆண் குழந்தை பிறந்தால் தாய் மாமனுக்கு தோஷம் உண்டு.
ஆனால், பெண் குழந்தை பிறந்தால் தோஷம் இல்லை.
தோஷம் குறைய விஷ்ணு பகவானை சனிக்கிழமை தோறும் வழிபட உறவில் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.
எந்த பலன் துல்லியமாக இருக்கும் இராசிபலனா? இலக்கன பலனா?
இலக்கனம் என்பது உயிர். இராசி என்பது உடல். உயிர் இல்லாத உடலுக்கு பலன் சொல்வது உபயோகமற்றது.
இலக்கன பலன் என்பது இனி வரும் காலங்களில் அனுபவிக்கும் இன்ப, துன்ப பலனை சொல்வதாகும்.
இராசிபலன் என்பது இன்று இந்த உடல் அனுபவிக்கும் இன்ப, துன்ப பலனை கூறுவதாகும்.
நட்சத்திரப் பொருத்தம் என்றால் என்ன ?
நட்சத்திரப் பொருத்தம் என்பது ஆதிகாலத்தில் இருந்து பார்க்கப்படும் தசா பொருத்தம் என்னும் 10 பொருத்தங்கள் ஆகும்.
பெண்ணின் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டே திருமணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.
நட்சத்திரப் பொருத்தம் என்னும் தசா பொருத்தம் :
1. தினப்பொருத்தம்.
2. கணப்பொருத்தம்
3. மகேந்திரப் பொருத்தம்
4. ஸ்திரீ பொருத்தம்
5. யோனிப்பொருத்தம்
6. ராசிப்பொருத்தம்
7. ராசி அதிபதி பொருத்தம்
8. வசியப் பொருத்தம்
9. ரஜ்ஜுப் பொருத்தம்
10. வேதைப் பொருத்தம்
வீடு கிரகப்பிரவேசத்திற்கான கணபதி ஹோமத்தை எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?
கிரகப்பிரவேசம் சூரிய உதயத்திற்கு முன் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டும்.
ஏனெனில், பிரம்ம முகூர்த்தம் என்பது விஷ தன்மையற்ற அமிர்த நேரமாகும்.
இதனால் வீட்டில் உள்ள தடைகள் நீங்கி இன்பம் உண்டாகும். இந்த கணபதி ஹோமத்தை சூன்யமற்ற அமிர்த நேரத்தில் செய்வது சிறப்பு.