Breaking News :

Friday, October 25
.

பூஜையறை எப்படி இருக்க கூடாது?


பூஜையறையை எப்பொழுதும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருப்பது நல்லது. அவ்வாறு நம் வீட்டு பூஜையறையை அலங்கரிக்கும் போது எளிய முறைகளை பயன்படுத்துவதால் நேரம் மிச்சமாவதோடு, மனதும் நிறைவாக இருக்கும்.

அப்படி பூஜையறையை எளிய முறையில் அலங்கரிப்பது எப்படி?

 முதலில் பூஜையறையில் கோலம் போட எலுமிச்சம் பழம் பிழியும் கருவியில் அரிசி மாவைப் போட்டு தரையில் தட்ட ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்கள் கிடைக்கும்.

ரோஜா, சாமந்தி பூக்களை வாங்கும் போது சில பூக்கள் காம்பில்லாமல் இருக்கலாம். அதில் எரிந்த ஊதுபத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.

 மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. மேலும் தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தி மயிலிறகிற்கு உண்டு.

 பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்த பின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர் கொண்டு விளக்கை அணைக்கலாம்.

மணமுள்ள பூக்களால் பூஜை செய்தால் அடுத்த நாள் அந்த மலர்களை வீணாக்காமல் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்தால் மணமுள்ள சீயக்காய் தயாராகிவிடும்.
 மழை நாட்களில், பூஜையறை தீபமேற்றும் தீப்பெட்டி நமத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கவும்.

பூஜையறையின் கதவுகளில் சிறு சிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும் போதும், மூடும் போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாக கேட்டு மகிழலாம்.

ஊதுபத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுபத்தி நிறைய நேரம் எரிந்து மணம் பரப்பும்.

 வெளியூருக்கு செல்லும்போது ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பு, மறு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். தெய்வங்களை பட்டினி போடக்கூடாது என்பது ஐதீகம்.

காலையிலும், மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5-6 மணிக்கு பூஜையறையில் விளக்கேற்றுவது மிகவும் நல்லது. அப்போது வீட்டின் வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால் தேவதைகளின் ஆசி கிட்டும்.

 வியாழக்கிழமையன்றே பூஜைக்கான பொருட்களை தேய்த்து சுத்தம் செய்து, விளக்குகளுக்கு குங்குமம் இட்டு, திரிபோட்டு வைத்தால் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உதவியாக இருக்கும்.

ஆணி இல்லாத படத்திற்கு பூ வைக்க பால்பாய்ன்ட் பேனா மூடியை சலஃபன் டேப் கொண்டு படத்தின் பின் தலைகீழாக ஒட்டவும். இப்போது பேனா மூடியினுள் காம்பை செருகி பூ வைக்கவும்.

 பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.