இறை சக்தி இல்லை என்றால் எப்படி இந்த பூமி இயங்காதோ, அதேபோலதான் நவகிரகங்களின் சுழற்சி நின்று விட்டாலும் இந்த பூமியும் தன்னுடைய சுழற்சியை நிறுத்திக் கொள்ளும். மனிதர்களுடைய வாழ்க்கையில் நல்லது கெட்டது, நவகிரகங்களை வைத்து தான் நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் மார்ச் 2025, 29ஆம் தேதி 6 கிரக செயற்கையானது மீன ராசியில் நிகழவிருக்கிறது.
இதன் அடிப்படையில் பன்னிரண்டு ராசிகளில் எந்த ராசிக்கு, இந்த ஆறு கிரக செயற்கையானது சோதனையை கொடுக்கும், எந்த ராசிக்கு இந்த ஆறு கிரக சேர்க்கை, அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. 12 ராசிக்காரர்களும் வரவிருக்கும் பிரச்சனையில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம். ஜோதிடம் சார்ந்த தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
தற்போது ராகு, புதன், சுக்கிரன் இந்த மூன்று பேரும் மீன ராசியில் இருக்கிறார்கள். வரும் மார்ச் 14ஆம் தேதி, சூரிய பகவான் மீன ராசிக்கு வரவிருக்கிறார். வரும் 28ம் தேதி சந்திரன் மீன ராசிக்குள் வரவிருக்கிறார். வரும் மார்ச் 29ஆம் தேதி சனிபகவானும் மீன ராசிக்குள் நுழையப் போகின்றார். ஆக மொத்தம் மார்ச் 29ஆம் தேதி ராகு, புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன், சனி பகவான் 6 பேரும் மீன ராசியில் வந்து அமர்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தப் போகிறார்கள். இதுதான் ஆறு கிரக சேர்க்கையில் நிகழவிருக்க இருக்கும் அற்புதம்.
இதற்காக யாரும் பயந்து விடக்கூடாது. கடவுளின் மீது பாரத்தை போட்டு அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதேபோலத்தான் இந்த 6 கிரக சேர்க்கையும் நம்மை கடந்து செல்லும். கிட்டத்தட்ட ஜூன் 30-ம் தேதி வரை இந்த ஆறு கிரக சேர்க்கையின் மூலம் தாக்கங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்
மார்ச் 29ஆம் தேதி நிகழவிருக்கும் இந்த ஆறு கிரக சேர்க்கையில் சிம்மம், கன்னி, மீனம், மேஷம், இந்த நான்கு ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும். பொருளாதார ரீதியாக எந்த ஒரு விஷயத்திலும் அகல கால் வைக்க கூடாது. சிந்தித்து செயல்பட வேண்டும்.
இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். உடல் உபாதைகள் ஏதாவது இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இன்னும் உங்களுடைய சொந்த வாழ்க்கையில் எந்த வகையில் பிரச்சனை வந்தாலும், அதிலும் கூட பொறுமையாக முடிவு எடுக்க வேண்டும். அவசரப்படாமல் இருப்பது ரொம்பவும் நல்லது. இந்த நான்கு ராசிக்காரர்களுமே தினமும் விநாயகரை வழிபாடு செய்யலாம். நன்மையை கொடுக்கும்.
அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்
மிதுனம், கடகம், தனுசு, இந்த மூன்று ராசிக்காரர்களுக்குமே அடுத்த மூன்று மாதங்களுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகிறது. நீண்ட நாட்களாக நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருந்த அனைத்து விஷயங்களுக்கும் உண்டான பலன் உங்கள் கையை வந்து சேரும். திறமை வெளிப்படும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருந்தவர்கள் உள்ளூரில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, நல்ல செய்தி கிடைக்கும். கடன் சுமை விலகும்.
ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைய துவங்கிவிடும். சுபகாரியங்கள் வீட்டில் நடக்க துவங்கும். இதுபோல நல்ல விஷயங்களை இந்த ஆறு கிரக சேர்கையானது உங்களுக்கு கொடுக்கப் போகிறது. இருந்தாலும் நீங்கள் அரசுக்கு புறம்பாக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
எந்த கிரக சேர்க்கையாக இருந்தாலும், 12 ராசிகளுக்கும் ஒரு தாக்கத்தை கொடுக்கும் அல்லவா. நீங்கள் எந்த ராசிக்காரர்கள் ஆக இருந்தாலும், 12 ராசியில் உங்கள் ராசி எந்த ராசியாக இருந்தாலும் சரி இந்த 5 மாதங்களுக்கு எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பங்கு சந்தையில் முதலீடு செய்வது, அரசாங்கத்திற்கு புறம்பாக எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். முதலீடு செய்யும் போது ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க வேண்டும்.
மூன்றாவது நபரை நம்பி கண்மூடித்தனமாக பணம் கொடுப்பது வாங்குவது போன்ற பரிவர்த்தனை இருக்கக்கூடாது. நம்பிக்கை இருக்கலாம். அதற்காக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் யாரையும் நம்பாமல் இருப்பதுதான் இந்த காலகட்டத்திற்கு உகந்தது. பிறகு அனைவரும் விவசாயத் தொழிலுக்கு கொஞ்சம் சப்போர்ட் செய்ய வேண்டும். விவசாயத்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் கைவிடக்கூடாது. விவசாயத்தை ஆதரிக்கும் போது இந்த ஐந்து மாதத்தில் உங்களுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம்
இந்த ஆறு கிரக சேர்க்கையின் மூலம் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய வழிபாடு விநாயகர் வழிபாடு. அடுத்தபடியாக செய்ய வேண்டிய வழிபாடு குலதெய்வ வழிபாடு. அடுத்ததாக ஒரு விசித்திரமான பரிகாரத்தையும் ஒரு பிரபல ஜோதிடர் சொல்லியுள்ளார். அதை தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள போகின்றோம். தினமும் காலையில் எழுந்தவுடன் ஸ ரி க ம ப த நி ஸ, ஸ நி த ப ம க ரி ச ஏழு ஸ்வரங்கள் பாடலை, யூடியூபில் போட்டு கேளுங்கள்.
இந்த ஸ்வரங்களையே பாட்டாக பாடுவார்கள். எந்த பாடகர் பாடி இருந்தாலும் பரவாயில்லை. தினமும் எழுந்து டிவியில் பாட்டு கேட்பது போல, யூடியூபில் ஒரு முறை இந்த பாட்டை கேட்டு விட்டாலே போதும். உங்களுடைய அன்றாட கஷ்டங்கள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. யார் உங்களிடம் பணம் கேட்கவில்லை. பெருசாக பரிகாரம் செய்ய சொல்வதில்லை. இந்த கிரகச் சேர்க்கையின் மூலம் பாதிப்பு வராமல் இருக்க இந்த பாட்டை கேளுங்கள் என்று சொல்லி இருக்காங்க.
இதை நாமும் பின்பற்றி தான் பார்ப்போமே நல்லது நடந்தால் அது நமக்கு அதிர்ஷ்டம் தானே. ஆகவே மேல் சொன்ன விஷயங்களை எண்ணி பயப்படாமல், எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்க பழகிக் கொள்ளுங்கள். இறைவன் நம்மை கைவிடமாட்டான் நல்லதே நடக்கும்.