Breaking News :

Sunday, May 11
.

சனிப் பெயர்ச்சி - சிம்மம் ராசி பலன்கள் ( திருக்கணிதப்படி 29.3.25 முதல்)


உங்கள் ராசிக்கு சனி பெயர்ச்சி பலன்களை பார்ப்பதற்கு முன்னதாக சில விஷயங்கள் பொதுவாக எடுத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது அதாவது   வாழ்க்கை துணை இந்த விஷயத்தில் பொதுவாக எந்த மனிதர்களுக்குமே நூறு சதவீதம் சிறப்பான ஒற்றுமை என்பது நிச்சயமாக இருக்காது ஏனெனில் நமது கர்மாவை அனுபவிக்க தான் பிறந்திருக்கிறோம் அதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும் அதில் முக்கியமான சில ராசிகள் மட்டும் வாழ்க்கை துணைவி விஷயத்தில் மிகவும் சிக்கலாக தான் இருக்கும் அதாவது மன நிறைவு என்பது இருக்காது அந்த வரிசையில் தான் இந்த  சிம்மம் ராசியும் வருகிறது வாழ்க்கைத் துணை விஷயத்தில் ஒரு மனக்குறை இருந்து கொண்டு தான் இருக்கும் எப்பொழுதும் அது இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் சற்று அதிகமாகும் மற்றும் பொதுவாகவே நண்பர்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது அதிலும் தற்சமயம் புதிதாக அறிமுகமாக இருக்கும் நண்பர்கள் கடந்த நான்கு மாதத்திற்குள்ளாக அவர்களுடன் பழகும் போது மிகவும் கவனம் தேவை சிக்கல்களை உருவாக்கலாம்.

பொதுவாகவே ஆண்களாக இருந்தால் ஆண்களோடு பேசுங்கள் பெண்களாக இருந்தால் பெண்களோடு பேசுங்கள் அதுதான் இந்த வருடத்தில் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் மேலும்   நீங்களாகவே உங்களது நண்பரின் போனை கட் செய்வது அல்லது பிளாக் செய்வது இதை செய்யாமல் இருப்பது நல்லது.

இதை நான் மட்டும் சொல்லவில்லை ஏற்கனவே எதார்த்த ஜோதிடர் (செல்வி) அவர்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டு இருக்கிறார் அதாவது ஏழாம் பாவம் என்பது தொலை தொடர்பு தொலைபேசி செல்போனை குறிப்பது அந்த பாவத்திற்குரிய சனி பகவான் தான் எட்டாம் பாவத்தில் வந்திருக்கிறார் ஆக செல்போனை என்பது ஒரு பிரச்சனையாக வரும்.

அஷ்டம சனி

இதுதான் தற்போது உங்களது சிம்மம் ராசிக்கு நடைபெற இருக்கிறது அதாவது உங்கள் ராசிக்கு ஏழாம் பாவமான கும்பம் ராசியில் இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்த சனி பகவான் தற்போதைய எட்டாவது ராசிக்கான மீனம் ராசிக்கு வருகிறார் அதாவது நமது ராசிக்கு எட்டாம் பாவத்தில் சனி பகவான் வரும் காலத்தைத் தான் நாம் அஷ்டமச் சனி என்கிறோம்
பொதுவாக இந்த எட்டாம் பாகம் என்பது மறைவு ஸ்தானம் நாம் என்ன நினைக்கிறோமோ என்ன ஆசைப்படுகிறோமோ அதற்கு எதிரான விஷயங்கள் நடைபெற கூடும் இந்த இடத்திற்கு சனி வருவது உங்கள் ராசிக்கு மிகவும் கொஞ்சம் அதிகமான சிரமங்களை தரக்கூடும் உங்கள் சுய ஜாதகப்படி நடக்கும் தசா புத்திகளை ஆய்வு செய்து கொள்ள வேண்டும் சில தசா புத்திகள் அதிகமான கெடுதல்களைத் தரும் அதில் மிக

சந்திரன் தசை

நடைமுறையில் இருப்பவர்கள் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் ஆனாலும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் ஜாதகம் சிறப்பாக இருந்தால் அது ஒரு லவ் சரி செய்து விடும் பெரிய சிக்கல் எதுவும் இல்லாமல் கடந்து வந்து விடலாம் ஆனாலும் கவனம் தேவை பொதுவாகவே இந்த அஷ்டமி சனி காலத்தில் புதிய முயற்சிகள் எல்லாவற்றையும் கொஞ்சம் தவிர்த்து விடுவது நல்லது பெரியவராவில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது சொத்துக்கள் வாங்குவது இவைகளை எல்லாம் கொஞ்சம் தவிர்த்து விடுவது நல்லது மேலும்

குரு பெயர்ச்சி

இதுதான் அடுத்த ஓராண்டு காலம் உங்களுக்கு சிறப்பாக காப்பாற்ற போகிறது குரு பகவான் தற்போது பத்தாம் பாவத்தில் இருக்கிறார் அடுத்த மே மாதத்திற்கு பிறகு 11 ஆம் பாவத்திற்கு வருகிறார் பதினொன்னாம் பாவம் என்பது உங்களது அடிப்படை தேவைகளை மனதின் ஆசைகளையும் நிறைவேற்றி தரக்கூடியது இந்த நேரத்தில் நல்லவர்களின் ஆதரவு நிச்சயமாக இருக்கும். எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து கடந்து வரக்கூடிய ஒரு நல்ல வழி கிடைக்கும் ஒரு பொறுமையும் நிதானமும் கிடைக்கும் மனதுக்கு ஒரு ஆள்கள் கிடைக்கும் அது அடுத்த ஓராண்டு காலம் குரு பகவான் கூடவே இருந்து காப்பாற்றுவார் என்று சொல்லலாம் மேலும்

ராகு கேது  பெயர்ச்சி

பலன்கள் உங்களது ராசிக்கு கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக எட்டாம் பாவத்தில் ராகு அமர்ந்திருந்தார் மறைமுகமாக பல சிக்கல்களை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருந்தார் அதாவது எதிரிகளின் தொல்லை கொஞ்சம் இருந்திருக்கும் ராகு என்றாலே ஏற்ற இறக்கங்கள் நிச்சயமாக இருக்கும் நுண்ணறிவு என்று சொல்லக்கூடிய நுணுக்கமான விஷயங்களில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் தொழில் வேலை எவற்றிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும் தற்போது
இந்த ராகு  ஏழாம் பாவத்திற்கு வருகிறார் ஆக ஏற்கனவே கடந்த மூன்று ஆண்டுகளாக சனி பகவான் அங்கே இருந்து பல புதிய சிக்கல்களை சிரமங்களை கொடுத்துக் கொண்டுதான் இருந்தார் தற்போது அந்த இடத்திற்கு ராகு வந்திருக்கிறார் இவர் இதுவரை வெளியில் தெரியாமல் இருந்த பிரச்சனைகளை பெரிதுபடுத்தி வெளியில் தெரிய வைப்பார் ஆக ஏழாம் பாகத்தில் ராகு என்பது அந்த ஏழு கூடிய சனி பகவான் எட்டாம் பாவத்தில் இருப்பதால் மேலே சொல்லப்பட்டது போல வாழ்க்கை துணை மற்றும் புதிய நண்பர்கள் இவர்களது விஷயத்தில் கொஞ்சம் கவனமாகத்தான் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்

பொதுவாகவே ஏழாம் பாவத்தில் ஆகும் என்பது அவ்வளவு சிறப்பானது அல்ல மற்றவர்கள் உங்கள் விஷயத்தில் உள் நுழைந்து உங்களுக்கு அவ பேரு ஏற்படுத்துக்கூடும் புதிய நண்பர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை இங்கேயும் தொலைத்தொடர்பு செல்போன் இவைகளை அளவோடு பயன்படுத்துவது நல்லது மேலும் ஏழாம் பாவத்திற்காக என்பது பல நன்மைகளையும் தரும் அதாவது புளிய கூட்டுத் தொழில் வெளிநாட்டு சம்பந்தப்பட்ட தொழில் வேலைவாய்ப்பு வெளிநாட்டு நண்பர்களால் உதவி இவை எல்லாம் கிடைக்கக்கூடும் அது உங்கள் சுய ஜாதகத்தில் அமையும் தசா புத்திகளை பொறுத்து சிறப்பாக அமையும் மேலும்  கேது
இவன் அந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உங்கள் ராசிக்கு இரண்டாம் பாவத்தில் அமர்ந்திருந்தார் இரண்டாம் பாகம் என்பது குடும்பம் பொருளாதாரம் மற்றும் உங்கள் பேச்சு இவைகளை குறிக்கக்கூடிய இந்த விஷயத்தில் பல சிக்கல்களை உருவாக்கி கொடுத்திருந்தார் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் பற்றாக்குறை உங்கள் பேச்சினால் புதிய பிரச்சனைகள் இவைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்த கேது தற்போது உங்கள் ஜென்மம் ராசிக்கு வருகிறார்

அதாவது சிம்ம ராசி இல்லையே கேது வருகிறார் இந்த சிம்மம் ராசி என்பது சூரியன் ஆட்சி பெற்ற ராசியாகவும் இது கேதுவுக்கு பகை வீடாக அமைகிறது ஆக உடல் நலம் மனநலம் இரண்டிலுமே கவனம் தேவை.
 
பொதுவாகவே இந்த நேரத்தில் ஒரு ஞானம் கிடைக்கும் அதாவது சில சிரமங்களை சந்தித்து அதனால் பெரும் அனுபவங்கள் உங்களுக்கு வாழ்நாள் முழுக்க துணையாக வரும் ஒரு நல்ல வாழ்க்கை பாடமாக அமையும் இந்த நேரத்தில் முக்கிய

விநாயகர் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மிகச் சிறந்த நல்ல பலன்களை தரும் முடிந்தால் ஒரு தடவை திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்திற்கு சென்று வருவது நல்லது. அது முடியாவிட்டாலும் பரவாயில்லை சனிக்கிழமை இது வரும் காலையில் நாம் சாப்பிடும் முதல் உணவு தலைக்கு பிடித்த பின் சிறிது காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது நல்லது சாப்பிடாமல் விரதம் இருப்பது என்பது இந்த நேரத்தில் நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.

எல்லா நேரங்களிலுமே அது நல்லது இல்லை ஆக உணவு என்பது மனிதன் சத்யவசி தேவை விரதம் என்பது ஏதாவது ஒரு நாள் ஆறு மாதத்திற்கு ஒரு தடவை இருக்கலாம் பொதுவாகவே இந்த 2025 மற்றும் 26 மற்றும் 27 இந்த ஆண்டுகள் கொஞ்சம் கவனமாக கடந்து வர வேண்டிய காலகட்டம்
தற்போது வரும் ஓராண்டு காலம் குரு பகவான் பெரிய அளவில் உதவியாக இருப்பார்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.