நவகிரகங்களில் சர்பமாக செயல்படக்கூடிய இரண்டு கிரகங்கள்
ராகு மற்றும் கேது ஆகும்.
ராகு பாட்டனாரையும்
கேது பாட்டியையும் குறிக்கும்.
கால சர்பம்:
முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்களை அவரின் வாரிசுகள் அனுபவிக்கும் அமைப்பை காலசர்பம் என்கிறோம்.
முன்னோர்கள் பாவம் செய்து இருந்தால் அவரின் வாரிசுகள் வேதனையையும்,
முன்னோர்கள் புண்ணிய காரியங்களை செய்து இருந்தால் அவரின் வாரிசுகள் யோகங்களையும் அனுபவிப்பார்கள்.
இதை ஜாதக ரீதியாக காண காலசர்பம் உதவுகிறது.
ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில் லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு கேதுவிற்குள் அடைபட்டு இருந்தால் அது கால சர்பம் என்கிறோம்.
கால சர்ப ஜாதகம் 2 வகைப்படும்.
கால சர்ப யோக ஜாதகம்
கால சர்ப தோஷ ஜாதகம்
கால சர்ப யோகம்:
ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுவிற்குள் அடைபட்டு இருந்து
கேதுவை நோக்கி அனைத்து கிரகங்களும் பயணித்தால் அவர் கால சர்ப யோகம் கொண்ட அமைப்பில் பிறந்த ஜாதகர் என்று அறியலாம்.
கால சர்ப தோஷம்:
ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில் அனைத்து கிரகங்களும் ராகு கேதுவிற்குள் அடைபட்டு இருந்து
ராகுவை நோக்கி அனைத்து கிரகங்களும் பயணித்தால் அவர் கால சர்ப தோஷம் கொண்ட அமைப்பில் பிறந்த ஜாதகர் என்று அறியலாம்.
கால சர்ப யோக பலன்:
கால சர்ப யோகத்தில் பிறந்த ஒருவருக்கு
பெரும் புகழ்
பெரிய அந்தஸ்து கவுரவம்
பெரிய பதவி/பெரிய தொழில் செய்தல்
செல்வமும் செல்வாக்கும் கிடைக்கும்.
கால சர்ப தோஷப் பலன்:
கால சர்ப தோஷத்தில் பிறந்த ஒருவருக்கு
எதிலும் போராட்டம்
சுபகாரிய தடை
வருமானம் குறைவு
நிம்மதி இன்மை
அதீத கஷ்டம், நஷ்டம்
ஏமாற்றம் போன்ற நிகழ்வுகள் ஏற்படுகிறது.