Breaking News :

Sunday, December 22
.

சித்தர்களை அமாவாசை, பௌர்ணமியில் வழிபாடுவது ஏன்?


அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கடலில் அலைகள் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் ஆர்ப்பரிக்கும் தன்மை உண்டு.

 

பூமி, சந்திரன் அதன் சுழற்சியினால் ஏற்படும் அமாவாசை பௌர்ணமி நாட்களில் சந்திரனின் சக்தி ஈர்ப்பு காரணமாக கடலில் அலைகள் அதிகளவில் வழக்கத்திற்கு மாறாக மேலே எழும்புகிறது.

 

அதேபோல மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக அதிக அளவு இந்த நாட்களில் மனநலம் பாதிப்பு அடைகின்றனர்.

 

நீங்கள் தியானம் செய்பவராக இருந்தால் அமாவாசை பௌர்ணமி தினங்களில் தியானம் செய்தால் தியானத்தன்மை இயற்கையின் உதவியால் இயல்பாக அதிகரிக்கும்.

 

நம் தன்மை எத்தகையதாக இருக்கிறதோ அதை இந்த குறிப்பிட்ட அமாவாசை பௌர்ணமி தினங்களில் இயற்கை வெகு இயல்பாக அதிகரிக்கும்.

இதன் காரணமாக தான் தியானம் செய்பவர்களுக்கு அமாவாசை பௌர்ணமி தினங்களில் அதிகளவு தியானம் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

 

கோவில்களிலும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் முக்கிய வழிபாட்டு தினங்களாக நம் கலாச்சாரத்தில் தொன்று தொட்டு நடைமுறையில் உள்ளது.

ஜீவசமாதிகளில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் மற்ற நாட்களை விட அதிக அளவில் அதிர்வை வெளிப்படுத்தும்.

 

ஆன்மிகத்தில் வளர்ச்சி அடைய விரும்புவர்கள் குறிப்பாக அமாவாசை பௌர்ணமி தினங்களில் அதிக அளவு வெளிப்படும் அதிர்வை உள்வாங்கும் முகமாக அன்றைய தினங்களில் ஜிவசமாதியான இடத்தில் வழிபாடுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஜீவ சமாதி அடைந்த இடத்தில் முக்கியமாக தியானம் செய்தால் முன்னர் பல ஆன்மீகவாதிகளுக்கு ஜீவசமாதியான சித்தர்கள் நேரில் காட்சி அளித்துள்ளனர் அது போல் காட்சி அளிக்க வாய்ப்புள்ளது.

 

உதாரணம்.

சதாசிவ பிரம்மேந்திரர்,

கரூர் அருகில் இருக்கும் நெரூரில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்.

சச்சிதானந்த சிவ அபிநவ நரசிம்ம பாரதி மகாசுவாமி [Sacchidananda Shivabhinava Nrusimha Bharati Mahaswami

அவர்கள் சிருங்கேரி மடத்தின் 33வது பீடாதிபதி, சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதியில் தியானம் செய்தபோது ஜீவ சமாதியிலிருந்த சதாசிவ பிரம்மேந்திரர் அவர்களை நேரில் தரிசித்துள்ளார்.

 

பொதுவாக ஜீவசமாதியில் இருக்கும் ஆன்மீக நபர் உடலளவில் இறந்தபோதும் உடல் தாண்டிய நிலையில் சூட்சம அளவில் அங்கே செயல்படுவார்.

 

ஜீவசமாதியானவரை பின்பற்றுபவர்கள், அங்கே தியானம் செய்து ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண வருவோர் மேலும் பொதுமக்கள் பலருக்கு சூட்சும நிலையில் இருந்து உதவி புரிவார்கள் ஜீவசமாதியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.