கடந்த கால கசப்பான அனுபவங்களுக்கு புதிய அனுபவங்ள் மூலமாக மன மகிழ்ச்சி ஏற்படும் சிறப்பான பலன்களை இந்த ஆண்டு காணலாம்.
மே மாதம் வரை குரு பகவான் லாப ஸ்தானமான 11-ம் இடத்தில் அமர்ந்து நற்பலன்களை வழங்கி வருவார் குடும்பத்தில் திருமண சுப நிகழ்ச்சிகள் நடக்கும் பண சேமிப்புகள் உண்டாகும்.
வரக்கூடிய குரு பெயர்ச்சி பலன்களில் ராசிக்கு 12-ஆம் இடமான விரைய ஸ்தானத்துக்கு வந்தாலும் சுப விரயங்கள் ஏற்படுத்தும் புதிய வீடு மனை நிலங்கள் வாங்கும் யோகம் உண்டாகும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்யலாம் புதிய முதலீடுகளால் லாபம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை மட்டும் தவிர்கவும்.
கேதுவும் ராசிக்கு 3-ம் இடமான உபஜெய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் வெளிநாடு யோகம் வெளிநாடு வேலை வாய்ப்புகள் உருவாகும். மே மாதம் வரக்கூடிய ராகு+ கேது பெயர்ச்சி பலன்களில் கேது ராசிக்கு இரண்டாம் இடத்திற்கு பின்னோக்கி வருவதால் மன குழப்பங்கள் காணப்படும். யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. ஆன்மீகப் எண்ணங்கள் மேலோங்கும் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
சனிபகவான் கடந்த ஐந்து வருடங்களாக நற்பலன்கள் எதையும் வழங்கவில்லை கடக ராசியான உங்களுக்கு இந்த சனி பெயர்ச்சியால் ராசிக்கு 9ஆம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு வருகிறார். சனிபகவான் பெரிய நன்மைகள் தரவில்லை என்றாலும் பெரிய பாதிப்புகள் என்பது இருக்காது. மன பாரங்கள் குறையும் மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் காணப்படும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் அரசியல் செல்வாக்கு கூடும். வழக்குகள் வாபஸ் ஆகும். பங்காளிகளுக்குள் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் தீரும் பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும் வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும் புதிய தொழில் மூலமாக நல்ல லாபங்கள் பெறுவீர்கள்.
ஒன்பதாம் இடத்தில் இருந்த ராகுபகவான் மே மாதம் வரக்கூடிய ராகு+ கேது பெயர்ச்சியில் அஷ்டம ஸ்தானத்திற்கு செல்தால் தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். பங்குச்சந்தை மற்றும் டிரேடிங் ஆன்லைன் வியாபாரங்களில் கவனம் செலுத்தவும். பெரிய முதலீடுகள் எதையும் போடாதீர்கள். திடீர் அதிர்ஷ்டங்களை நம்பி பண இழப்புகள் ஏற்படும் புதிய நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் பணம் சேமிப்புகள் முறையாக இருக்க வேண்டும் தனியார் நிதி நிறுவனங்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
பரிகாரம்!
வாரந்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமைகளில் பத்ரகாளி வழிபாடும் ஊர் காவல் தெய்வங்களான கருப்புசாமி வீரபத்திரர் துர்க்கை அம்மன் போன்ற உக்கிர தெய்வ வழிபாடுகள் சிறப்பை தரும் இவர்களுக்கு எலுமிச்சம் பழம் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.