கடந்த ஆண்டு ஏழரைச்சனியின் ஜென்மச்சனி இரண்டில் ராகு 8ல் கேது 4ல் குரு என வருட கோள்கள் எந்த ஒரு நற்பலன்களை வழங்கில்லை. வரும் மேமாதம் வரக்கூடிய குருபெயர்ச்சியிர் 4-ம் இடத்தில் இருந்த குருபகவான் 5-ம் இடமான பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு வருவதால் நன்மைகள் பல காணலாம்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலைத்திருக்கும் தடைபட்ட திருமண சுபகாரியங்கள் நடக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில் வியாபாரங்கள் செழிப்படையும் நல்ல லாபத்தை தரும் புதிய தொழில்கள் மூலமாக லாபம் பன்மடங்கு உயரும் நீண்ட நட்களாக இழுபறியில் இருந்துவந்த வேலைகள் முடிவுக்கு வரும். வாகனங்கள் சொத்துக்கள் வாங்க முடியும்.
வெளியில் கொடுத்து வராமல் இருந்த தொகை கைக்கு கிடைக்கும் பண தேவைகள் பூர்த்தியாகும். சனிபகவான் ஜென்மத்தில் இருந்து இரண்டாம் இடத்துக்கு வந்திருப்பதால் பண விவகாரங்கள் கவனத்துடன் இருக்கவும் யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம் கணவன் மவைிக்குள் மன ஸ்தாபங்களும் ஈகோ பிரச்சனைகளும் தலைத்தூக்கும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போவதால் நன்மைகள் உண்டாகும். பங்களிகளுக்குள் சொத்து பிரச்சனைகள் தலைதூக்கும்.
கோர்ட் கோஸ் என அலைகழிப்படுவீர்கள். சகோதரர்களுக்குள் விட்டுக்கொடுத்து போகவும். முன் கோபத்தை தவிர்கவும். 12-ம் இடத்தில் உள்ள ராகு மேமாதம் வரக்கூடிய ராகு+கேது பெயர்ச்சியில் ராசிக்குள் வரவதால் மனக்குழப்பங்கள் காணப்படும் முடிவுகள் எடுப்பதில் கால தாமதம் ஏற்ப்படும் .அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக பழகுங்கள் வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிக அளவில் காணப்படும் வேலை மாற்றம் செய்யாதீர்கள்.
8-ம் இடத்தில் இருந்த கேது 7ம் இடத்துக்கு வருவதாலும் கேதுவாலும் இவ்வருடம் பலன்கள் இல்லை. சோம்பல் அதிகமாக காணப்படும் வேலைக்கு போகும் எண்ணங்கள் இருக்காது. வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும் வீண் ஆடம்பர செலவுகள் தவிர்கவும்.
ஆன்மீக பயணங்கள் சுப விரையங்கள் ஏற்ட்டாலும் மன அமைதி கிடைக்கும். சனி+ராகு-கேது மூன்று கோள்கள் பலன் அளிக்காவிட்டாலும் குருபகவான் இந்த ஆண்டு உங்கள் ராசியை தூக்கி நிறுத்தும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதனால் உங்கள் ராசிக்கு இந்த தமிழ்ப்புத்தாண்டு பொன்னான ஆண்டாக இருக்கும் .ஒரு கிரகம் தீமையை தந்தால் எதாவது ஒரு கிரகம் நன்மையை வழங்கும்.கவலை கொள்ளாதீர்கள்.
பரிகாரம்!
வாரம் தோறும் வரக்கூடிய சனிக் கிழமைகளில் நவகிரக கேது வழிபாடும் சதுர்த்தி தினத்தில் விக்ன வினாயகருக்கு அர்ச்சனையும் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்.